4/26/2014

| |

மதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம் கொணர்வேன்! - வாசு

மதவாத, இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு தண்டனை வழங்குவதற்காக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கப் போவதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகிறார்.

பொதுபல சேனா போன்ற இனவாத, மதவாத அமைப்புக்களின், மக்களுக்குத் திருப்தியற்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதெனவும், பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு பலாத்காரமாக முடிவு எடுப்பது மதகுருமாருக்கு உசிதமானது அல்ல எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

வில்பத்துவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பொதுபல சேனாவினர் செயற்படுவது சாதாரண ஒரு விடயம் என்றாலும், இனவாத்த்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருக்காலும் இடமளிக்க முடியாது என்று குறிப்பிடுகின்ற அவர், துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற ஜனநாயக எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, மதவாத மற்றும் இனவாதத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு அமைப்பையும் இச்சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியும் எனவும் குறிப்பிடுகிறார்.