4/28/2014

| |

பொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்

மட்டக்களப்பு மண்முனைப் பாலத்தின் இரு முனைகளும் உள்ளூர் வாசிகளை கவரும் இடமாக மாற்றம் பெற்று வருகின்றது.
படுவான் கரையில் உள்ள மக்களைவிட வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பொழுதுபோக்கு தளமாக பாலத்தின் இரு முனைகளையும் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் பொழுது போக்குக்காக இப்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்களின் விளையாட்டுக் பொருட்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் , ஐஸ் கிறீம்  விற்கும் வியாபாரிகளும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இது பற்றி ஒரு வயோதிபர் கருத்துத் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு-கொழும்பு; புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட போது அதிகளவானோர் ரயிலில் பிரயாணம் செய்யும் அவாவில் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கான பயணச்சீட்டைப் பெற்று போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
இதனால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை மேற்கொள்வோர் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது இரண்டு மாதங்களின் பின்பு ரயிலில் பிரயாணம் செய்யும் ஆவா தீர்ந்ததும்; தூர இடங்களுக்கான பிரயாணத்தை மேற்கொள்வோர் மட்டும் ரயிலைப் பயன் படுத்தியதனால் சௌகரியமாக பிரயாணத்தை மேற்கொண்டனர்.
இதே போன்ற நிலைதான் மிக விரைவில் இப்பாலத்திற்கும் நடக்கும் என அவர்  புன்னகையோடு தெரிவித்தார்.