4/12/2014

| |

ஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு

ஈரானுடனான எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ரஷ்யா நிராகரித்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து மொஸ்கோவில் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனத்திடம் ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜp ரியாப்கோவ் புதன்கிழமை கூறியதாவது:
ரஷ்ய-ஈரான் வர்த்தகம் என்பது ஓர் இயற்கையான நடைமுறை. இதில், எவ்வித அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது பொருளாதார சவால்களையோ யார் மீதும் திணிக்க முடியாது. ~~ஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெர்ரி அச்சுறுத்தியுள்ளார். ஈரான் ரஷ்யாவுடன் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் எதுவும் ஏற்படுத்தியுள்ளதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஈரானுடன் வழக்கமான பரிமாற்றங்களைதான் ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. விவசாயம், எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளில் பொருத்தமானவற்றின் உறவினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம்.
அமெரிக்கா தன்னிச்சையாக பொருளாதாரத் தடை விதிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எனினும், அவர்களின் (அமெரிக்கா) இலக்கு எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நிலைப்பாட்டை நிராகரிக்கிறோம் என்று செர்ஜp ரியாப்கோவ் தெரிவித்தார். அணுசக்தி ஒப்பந்தம்: ரஷ்யாவின் ~~கோம்மர்சன்ட" என்ற வர்த்தக நாளிதழில், ~~ஈரானிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய்யை ரஷ்யா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது ஈரானுடன் கடந்த ஆண்டு வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ஏற்றுமதி வரையறையை தகர்க்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் யுரேனியத்தை செறிவு+ட்ட மாட்டோம் என்றும், அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்த தைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.