அடப்பன் வீதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோன் ஜெயரோமி கொன்சலிட்டா(22) என்ற இளம் பெண் நேற்று முன்தினம் (13.04.2014) அன்று காணாமல் போன நிலையில் நேற்றைய தினம்(15.04.2014) குறித்த பெண்ணின் வீட்டருகில் உள்ள கிணற்றில் இருந்து கொன்சலிட்டாவின் சடலம் மீட்கப்பட்டது.
இப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் பலரும் கருதிய போதும் அதன் பின் இடம்பெற்ற விசாரணைகளில் இப் பெண்ணின் மரணம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் தாயான ஜெரோன் மேரி புஸ்பராணி என்பவர் தெரிவிக்கையில், “எனது மகள் படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் அருகில் இருந்த பெரிய கோவில் சபையினுடைய இரு பாதிரிமார் எனது மகளை மறைக் கல்வி போதிக்க அனுப்புமாறு கோரினர். வீட்டில் சும்மதா தானே இருக்கிறாள் போய் மறைக் கல்வி கற்பிப்பது நல்லம் தானே என நானும் ஒம் என்று விட்டுட்டேன். ஆனால் மறைக்கல்வி போதிக்கச் சென்ற எனது மகளை அங்கிருந்த பிரதான பாதிரியாரின் உதவியாளர்கள்; தொடர்ச்சியாக எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

அங்கிருந்து வந்ததும் எனது மகள் ஒரே சோகமாய் அமர்ந்திருப்பாள். அவளது தொலைபேசிக்கு ஒரே அழைப்பு வரும். அதை அவள் கட் பண்ணுவாள். இந் நிலையில் அவளிடம் நடந்தவற்றை விசாரித்தேன். அப்போது தான் அவள் கூறிய கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த உதவிப் பாதிரியார் தன்னை காதலிக்குமாறு எனது மகளை கேட்டுள்ளார். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க எங்க போனாலும் என்னை மறக்க கூடாது என்னுடன் தொடர்பில இருக்கணும் எனக் கூறியதுடன் மேலே உள்ள தனது றூமுக்கும் வருமாறு உதவிப் பாதிரியார் வற்புறுத்தியுள்ளார். “இதனை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால் உன்னைப்பற்றி கூடாமல் சொல்லுவன்” என மிரட்டியுள்ளார்.
அதன் பின் எனது பிள்ளை வெளியில் போறதே குறைவு. ஒரே பயந்து போய் இருபபாள். அவளுடைய தொலைபேசிக்கு பலதடவைகள் கோல் வந்துள்ளது. அதன் பின் தான் அவள் சென்றுள்ளாள். ஆகவே எனது மகள் இறப்பதற்கு இந்த நாசம் கெட்ட உதவிப் பாதிரியாரே காரணம்” என அழுது புலம்பினார்.
மரணமடைந்த கொண்சலிட்டா என்ற இளம்பெண்ணின் மரணசடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாக பெண்ணின் தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து இக்கொலையின் மர்ம முடிச்சு அவிழ்ந்துள்ளது.