4/03/2014

| |

படுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிடம் கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இன்று பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.
படுவான்கரை பிரதேச மக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட நவீன முறையில் அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கான கட்டிடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் புறநெகும திட்டத்தின் கீழ் நான்கு கோடி ரூபா செலவில் இந்த பிரதேசசபைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நவீன பிரதேச சபை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவின் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் , முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பிரதேசசபையானது நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதானது இப்பிரதேச மக்களின் பல்வேறு தேவைகளை இலகுவில் பூர்த்திசெய்யக்கூடிதான சேவையினை வழங்கமுடியும்.
குடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளுராட்சி மன்றங்களில் நன்மைகளை கடந்த காலத்தில்பெற்றுக்கொள்ளமுடியாத நிலைமை இருந்துவந்தது.எனினும் தற்போதைய காலகட்டத்தில் கிராமிய ரீதியிலான வளர்ச்சியில் உள்ளுராட்சி மன்றங்கள்,பிரதேச சபைகள் முக்கிய பங்காற்றிவருகின்றன.
இதேபோன்று வவுணதீவில் நவீன பிரதேச சபை கட்டிடம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.