4/27/2014

| |

மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

வேட்புமனு தாக்கல் செய்யும் திருநங்கை பாரதி கண்ணம்மாஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் மதுரை தொகுதியில் திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
53 வயதாகும் பாரதி கண்ணம்மா, இந்திய நாடாளுமன்றத்தின் முதல் திருநங்கை உறுப்பினராக வர வேண்டும் என்ற விருப்பத்துடன் நடக்கவுள்ள தேர்தலில் சுயேச்சையாக களம் நிற்கிறார்.
முதுகலைப் பட்டம் படித்து பிரபல தனியார் வங்கி ஒன்றில் வேலைபார்த்துவந்த இவர், தற்போது முழுநேர சமூக ஆர்வலராகவும், திருநங்கையர் நலத்துக்காக குரல்கொடுப்பவராகவும் இருந்துவருகிறார்.
இந்தியாவில் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற திருநங்கையர் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் மிக அண்மையில்தான் தீர்ப்பளித்திருந்தது.