வரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் நேற்று இரவு கொழும்பில் காலமானர். முகம்மது சமீம் பதுளையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
கம்பளை, கொழும்பு சாஹிராக் கல்லூரிகளின் அதிபராகவும் பணியாற்றிய இவர் கல்விச் சமூகத்திற்கு சிறந்த கல்விச் சேவைகளைச் செய்தார்.
கம்பளை, கொழும்பு சாஹிராக் கல்லூரிகளின் அதிபராகவும் பணியாற்றிய இவர் கல்விச் சமூகத்திற்கு சிறந்த கல்விச் சேவைகளைச் செய்தார்.
இவர் கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணிப்பாளாரகவும் நீண்டகாலம் சேவையாற்றினார். கிழக்கு மாகாணத்தில் புதிய பாடசாலைகள், ஆசிரியர் நியமனங்களை வழங்கி கிழக்கில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவையை ஆற்றினார். இவர் பல ஆய்வு நூல்களையும் வரலாற்று நூல்களையும் தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளார்.
. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்புப் பட்டதாரியான இவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகவும், அதிபராகவும் மட்டுமின்றி பிற்காலத்தில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சினைகள், முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.