4/14/2014

| |

மழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்

நாட்டில் நிலை கொண்டுள்ள வறட்சியைக் கருத்திக் கொண்டு சம்மாந்துறை ஜம்இயத்துல் உலமா சபை, நம்பிக்கையாளர் சபை இணைந்து ஏற்பாடு செய்த மழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும் இன்று 2014.04.12 சனிக்கிழமை காலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம்பெற்றது.
மௌலவி வை.எம். ஜலீல் தலைமை தாங்கி நடத்தினார். தொழுகையைத் தொடர்ந்து மௌலவி ஏ.எல். ஆதம்பாவாவினால் பயான் நிகழ்த்தப்பட்டதோடு மௌலவி எம்.ஏ. ஹஜ்ஜூ முகம்மது ஹாபிஸால் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.இதில் சம்மாந்துறைப் பிரதேசத்தினை சேர்ந்த ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.