மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 618 மில்லியன் ரூபா நிதிக்கான ஆவணத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிடம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திங்கட்கிழமை (28) கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்டிருப்புத்தொகுதிக்கான ஆவணத்தை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடமும் மட்டக்களப்பு பிரதேசத்திற்கான ஆவணத்தை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடமும் கல்குடாத்தொகுதிக்கான ஆவணத்தை அமைச்சர் பசீர் சேகுதாவூதின் இணைப்பாளர் எம்.முஸ்த்தபாவிடமும் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கையளித்தார்.
இதன்போது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்; அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல்; கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.சாந்தன பண்டார, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.வகாப்தீன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்றது.