4/01/2014

| |

மலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய திடீர் அறிவிப்பு

என்னப்பா நடக்குது -என்னமோ உளவு சதி இருக்குது
கடந்த 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானத்தை உலக முழுவதிலும் உள்ள நாடுகளின் மீட்புப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் அருகே இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிபட கூறினார். மலேசிய அரசும், அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்துவிட்டதாக அறிவித்து, பயணிகளின் குடும்பத்தினர்களுக்கு அனுதாபமும் தெரிவித்தது.
இந்நிலையில் கடலில் மிதப்பதாக கூறப்படும் பொருட்களில் சிலவற்றை சீன போர்க்கப்பால் கைப்பற்றி ஆய்வு செய்ததில் கடலில் மிதக்கும் பொருட்களுக்கும், விமானத்தின் பாகங்களுக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லை என்றும், விமானம் இங்கே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மீட்புப்படைகள், விமானத்தை எங்கு தேடுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றன. இந்நிலையில் மலேசிய மலேசியா விமானாம்உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்த தகவல் ஒன்றில் “விமானம் எவ்வித ஆபத்தும் இன்றி பத்திரமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், ஏதாவது அதிசயம் நடந்து பயணிகள் அனைவரும் உயிருடன் திரும்ப வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளார். விமானத்தின் பாகங்கள் எங்குமே கிடைக்கவில்லை என்றால், விமானம் ஏதோ ஒரு இடத்தில் பத்திரமாக இருக்கின்றது என்றுதானே அர்த்தம் என்று மீட்புப்படைகளும் கருத்து தெரிவித்துள்ளன.
உரிய விசாரணைகளை இதுவரை எந்த நடும் உருப்படியாக செய்யவில்லை.
அப்பாவி உயிர்களுடன் விளையாடும் மலேசியா அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்
வழக்கு தொடர பயணிகளின் உறவுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது
மலேசிய அரசின் இந்த முன்னுக்கு பின் முரணான செய்திகளினால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதுடன்
கொந்தளித்து போயுள்ளனர் .