4/11/2014

| |

வெருகல் படுகொலை நினைவு நாள் - 2014

வெருகல் படுகொலை நினைவு நாள் - 2014

வெருகல் படுகொலை நடைபெற்று 10 வருட நிறைவடைகின்ற இன்றைய நாளில் அந்த படுகொலையீல் உயிர்நீத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வீரமறவர்களை நினைவு கூருகின்ற நினைவு நாள் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவர் சந்திரகாந்தன்,  பிரதித் தலைவர் திரவியம்(ஜெயம்), பிரதித் தலைவர் நிருவாகம் யோகவேள், செயலாளர்  பூ.பிரசாந்தன், பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ், கட்சியின் வெளியுறவு இணைப்பாளர் துரைநாயகம், கட்சியின் மூத்த உறுப்பினர்களான மார்க்கன், றீகசீலன், றஞ்சன், மகிழன், புவி, அஜித், தேவிகாந், சூட்டி ஆகியோரும்  கட்சியின்  தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள், கட்சியின்  உறுப்பினர்கள்,  மற்றும் உயிரிழந்த வீரர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
உயீர்நீத்தவர்களின் நினைவாக வெருகலம்பதி முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கட்சியின் தலைவராலும் உயிர்நீத்தவர்களின் உறவினர்களாலும் பிற்பகல் 5.30 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டதுடன், தேசியத் தலைவரினால் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.