உலகத் தொழிலாளர் தினம் 2014 உலகத் தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன ஊர்திப் பேரணி நிகழ்வு எதிர்வரும் 01.05.2014ம் திகதி பி.ப 01.30 மணிக்கு மட்டக்களப்பு லேக் வீதியில்; அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி மண்முனைப் பாலத்தினூடாக மகிழடித்தீவுச் சந்தியைச் சென்றடைந்து. அங்கு உழைக்கும் வர்க்கத்தின் நலன் காக்கும் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தமிழரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க படுவான்கரை மண்ணின்; மகிழடித்தீவுச் சந்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நடத்தும் மாபெரும் மேதின நிகழ்வு பெறவுள்ளது.
4/30/2014
| |
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் படுவான்கரை மண்ணில்
4/28/2014
| |
மட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையளிப்பு
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல்; கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.சாந்தன பண்டார, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.வகாப்தீன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
| |
பொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்
படுவான் கரையில் உள்ள மக்களைவிட வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பொழுதுபோக்கு தளமாக பாலத்தின் இரு முனைகளையும் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது.
சிறுவர்களின் விளையாட்டுக் பொருட்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் , ஐஸ் கிறீம் விற்கும் வியாபாரிகளும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பு-கொழும்பு; புகையிரத சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட போது அதிகளவானோர் ரயிலில் பிரயாணம் செய்யும் அவாவில் மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கான பயணச்சீட்டைப் பெற்று போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
இதே போன்ற நிலைதான் மிக விரைவில் இப்பாலத்திற்கும் நடக்கும் என அவர் புன்னகையோடு தெரிவித்தார்.
| |
வீடுகள் கையளிக்கும் நிகழ்வு
4/27/2014
| |
மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
4/26/2014
| |
42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்
42 வது இலக்கியச்சந்திப்பு பேர்ளின்
நிகழ்ச்சி நிரல்
மே மாதம் 17 திகதி 2014 சனிக்கிழமை
இடம் : Werkstatt der Kulturen Wissmannstr 32
12049 BERLIN
9:00 சுயஅறிமுகம்
9:30 என் கே ரகுநாதனின் “பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி“ அறிமுகமும் விமர்சனமும். :-ஷோபாசக்தி
10:30 தெணியானின் "இன்னும்சொல்லாதவை " வாழுவனுபவங்கள் : சந்துஸ்
11:00 சாதியமும் சுயவிசாரணையும் : - ஜீவமுரளி
11:30 "தலித்விடுதலையில் சாதியச்சாடல்கள்" அருந்ததியார் சமூகத்தை முன்வைத்து :-என் சரவணன்
நெறிப்படுத்தல் :- ராகவன்
13:00 மத்தியானச்சாப்பாடு
14:00 ”இடைநிலை” :- விஜயன் விஜயதாசன்
திட்டமிடப்படாத உடலியல் செயற்பாட்டு அரங்க அளிக்கை
15:00 பாலியல் அரசியல் :- லிவிங் ஸ்மைல் வித்யா
நெறிப்படுத்தல் :- ஹரி ராஜலட்சுமி
16:00 மலையகம் : “இருள்வெளிப்பயணம்! :- மு. நித்தியானந்தன்
;.
17:00 2009 பின் இலங்கையில் சிறுபான்மையினர் : ரவுஃப் முகமட் காசிம் Rauf Mohamed Cassim
நெறிப்படுத்தல்: என் சரவணன்
18:00 சுமதியின் “இங்கிருந்து” திரையிடலும் விமர்சனமும்
மே 18 ம் திகிதி 2014 ஞாயிறு
10:00 போரின் பின் பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் ( ஆய்வு அறிக்கையும் முன்மொழிவுகளும் : நளினி ரத்னராஜா - பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர்
நெறிப்படுத்தல்:- உமா
13:00 மத்தியானச்சாப்பாடு
14:00 நவதாரளவாதமும் புனரமைப்பும் மீளிணக்கமும் :- நிர்மலா ராஜசிங்கம்
மகாணசபைகளும் சிறுபான்மை இனங்களின் எதிர்காலமும் :- எம் ஆர் ஸ்ராலின்
நெறிப்படுத்தல் :-தேவாதாஸ்
16:00 லீனா மணிமேகலையின் ” வெள்ளைவான் கதைகள்”
திரையிடலும் விமர்சனமும்
வாசுகனின் “அடையாளம்” ஓவியக்கண்காட்சியும் தமயந்தியின் புகைப்படக்கண்காட்சியும்இடம்பெறும்
தொடர்புகளுக்கு
42ndillakkiyasanthippu@gmail.com
தொலைபேசி
0049 15212861262
00493061617808
| |
ஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டும் - ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு.
தள வைத்தியசாலை எனும் நாமம் இல்லாது தரம் உயர்த்ப்படாத போதும் தளவைத்தியசாலைக்கு ஈடான வைத்திய சேவையினை வழங்கிவரும் இவ் வைத்தியசாலையினை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பல முறை கோரப்பட்டு வந்ததது. மகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களினால் கிழக்கு மகாண அமைச்சரவை அனுமதிக்காக முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் ஆரையம்பதி வைத்திய அதிகாரி திருமதி மோகனாவதி மற்றும் ஆரையம்பதி வை;தியசாலை அபிவிருத்திக்குழுவின் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை மன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவருமான பூ.பிரசாந்தன் கையளித்து சுட்டிக்காட்டப்பட்டபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
| |
மதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம் கொணர்வேன்! - வாசு
பொதுபல சேனா போன்ற இனவாத, மதவாத அமைப்புக்களின், மக்களுக்குத் திருப்தியற்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதெனவும், பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு பலாத்காரமாக முடிவு எடுப்பது மதகுருமாருக்கு உசிதமானது அல்ல எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
வில்பத்துவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பொதுபல சேனாவினர் செயற்படுவது சாதாரண ஒரு விடயம் என்றாலும், இனவாத்த்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருக்காலும் இடமளிக்க முடியாது என்று குறிப்பிடுகின்ற அவர், துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற ஜனநாயக எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, மதவாத மற்றும் இனவாதத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு அமைப்பையும் இச்சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியும் எனவும் குறிப்பிடுகிறார்.
| |
ஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற்ற நடமாடும்சேவை
4/23/2014
| |
இப்போதாவது புத்தி வந்ததே
வடமாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்குபற்றும் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், மதியாபரணம் சுமந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி உள்ளூராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
4/22/2014
| |
கொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை ஆரம்பம்
4/19/2014
| |
மண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று நினைவுகூரப்படுகின்றனர்
01.நல்லதம்பி தில்லையம்மா(முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
02.சாமித்தம்பி சின்னப்பிள்ளை (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
03.சாமித்தம்பி தருமராசா (முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 12.09.1973
04.நல்லதம்பி சின்னத்துரை(எழுதுவினைஞர்-மகிழடித்தீவு) காவு கொள்ளப்பட்ட நாள் – 26.12.1985
05.கனகசபை ஜயதரன்(உதவி அரசங்க அதிபர்-பட்டிப்பளை) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
06.மாணிக்கப்போடி கங்கேஸ்வரி(ஆசிரியை முனைக்காடு) காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
07.கதிர்காமப்போடி ஆறுமுகம்(பட்டிப்பளை)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
08.செல்லத்தம்பி தங்கராசா(அரசடித்தீவு)காவு கொள்ளப்பட்ட நாள் – 17.01.1992
09.குமாரசிங்கம் வள்ளியமை(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
10.வேலுப்பிள்ளை சந்திரகுமார்(முதலைக்குடா)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
11.பாலிப்போடி கெதராஜ்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
12.குமாரசிங்கம் கமலா
(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
13.வைரமுத்து அரன்கனதன்(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
14.விஜயலிங்கம் சுகந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் – 24.05.1992
15.விஜயலிங்கம் ஜெயந்தினி(கொக்கட்டிசோலை)காவு கொள்ளப்பட்ட நாள் ௨4.05.1992
| |
மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார்.
| |
இலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்பாண ஆயர் ஏன் ஒழிந்தோடினார்?
மறைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்க சென்ற சமயத்தில் அங்கு பணியாற்றிய இரண்டு சில்மிசக்கார பாதிரிகளே இவரது மரணத்திற்கு காரணம் என கொன்சலீற்றாவின் உறவினர்களினால் குற்றம்சாட்டப்பட்டு, அதற்கு ஆதாரமாக பாதிரிகள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை காவல்த்துறையிடம் வழங்கியுள்ளனர்.
இவரது மரணத்தையடுத்து கிறிஸ்தவ மக்கள் செறிந்தவாழும் கரையோர பிரதேசமக்கள் பெரும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், காமுகர்களான இரண்டு பாதிரியார்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பிரேதபரிசோதனைகளின் பின்னர் நேற்று கொன்சலீற்றாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைகக்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், அயலவர்கள் என பெரும் திரளான மக்கள் கொன்சலீற்றாவின் உடலையும் எடுத்துக் கொண்டு நீதிகோரி வீதிவீதியாக கதறியழுதது பார்ப்பவர்களின் நெஞ்சையுருக்கும் காட்சியாக இருந்தது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாண ஆயர் இல்லத்தின் முன்பாக கொன்சலீற்றாவின் உடலை வைத்து மக்கள் கதறியழுது போராட்டம் நடத்தினார்கள். இந்த காட்சியை பார்த்த வீதியால் சென்றவர்கள், அந்த பகுதியில் நின்றவர்கள், வீதிஒழுங்கை கவனித்த காவல்த்துறையினர் என அனைவருமே கண்ணீர்விட்டு அழுதபோதும், யாழ்ப்பாண ஆயர் இல்ல கதவுகள் மட்டும் திறக்கவேயில்லை. கதறியழுத்த மக்களின் பிரச்சனைகளை கேட்கவோ ஆறுதல் சொல்லவோ ஆயரோ, வேறு ஒரு பாதிரியோ வெளியில் வராமல் உள்ளே ஒழிந்திருந்தனர். இந்த செயலால் மக்கள் மேலும் கொதித்துப் போயுள்ளனர்.
| |
வரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்
கம்பளை, கொழும்பு சாஹிராக் கல்லூரிகளின் அதிபராகவும் பணியாற்றிய இவர் கல்விச் சமூகத்திற்கு சிறந்த கல்விச் சேவைகளைச் செய்தார்.
4/17/2014
| |
மறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம் பெண் தற்கொலை.
இப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் பலரும் கருதிய போதும் அதன் பின் இடம்பெற்ற விசாரணைகளில் இப் பெண்ணின் மரணம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மரணமடைந்த பெண்ணின் தாயான ஜெரோன் மேரி புஸ்பராணி என்பவர் தெரிவிக்கையில், “எனது மகள் படித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் அருகில் இருந்த பெரிய கோவில் சபையினுடைய இரு பாதிரிமார் எனது மகளை மறைக் கல்வி போதிக்க அனுப்புமாறு கோரினர். வீட்டில் சும்மதா தானே இருக்கிறாள் போய் மறைக் கல்வி கற்பிப்பது நல்லம் தானே என நானும் ஒம் என்று விட்டுட்டேன். ஆனால் மறைக்கல்வி போதிக்கச் சென்ற எனது மகளை அங்கிருந்த பிரதான பாதிரியாரின் உதவியாளர்கள்; தொடர்ச்சியாக எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
| |
வாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்
கூல் மேன் ஐஸ் உற்பத்தி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வானது, தொழில் அதிபரும் மேற்படி நிறுவனத்தின் உரிமையாளருமான ஆசிரி திபுது பெரேரா தலைமையில் இடம்பெற்றது.
4/16/2014
| |
முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்
இக்கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை (12); யாழ்.குருநகர் சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது, கட்சி சின்னம் மற்றும் கட்சியின் யாப்புக்கள் வெளியிடப்பட்டன.
இக்கட்சி வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்சியின் செயலாளர் நாயகமாக சுதர்சிங் விஜயகாந்த் செயற்படவுள்ளதுடன், பிரதித் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர்.
இந்தக் கட்சித் பற்றி செயலாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்காக இக்கட்சி புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிறைகுடம் சின்னத்துடன், ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம் ஆகிய நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதில் சிவப்பு அர்ப்பணிப்பினையும், மஞ்சள் ஒழுக்கத்தினையும், நீலம் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் மக்களின் நிலம், கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படவேண்டுமென்றும் என்ற நோக்குடனும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தனி தமிழம் இனி வரும் காலங்களில் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு தனி தமிழீழம் கிடைக்குமென்றால், மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் தம்முடன், ஒன்றிணைந்தால், தமது கொள்கைகளுக்கும், தமிழ் கட்சிகளின் கொள்கைளுக்கும் அமைவாக ஏற்று நடக்க தாம் தயார் என்றும் அவர் கூறினார்.
இம்மாதம் இறுதி வாரத்தில் பொதுச்சபைக் கூட்டத்தினை கூட்டி பொதுச்சபை உறுப்பினர்களின் ஆலோசனையுடன், தேர்தல் ஆணையாளரிடம் கட்சியைப் பதிவு செய்து விட்டு, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
| |
கனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடாகும்
| |
திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு
4/15/2014
| |
மாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையும் பவளவிழாவையும் புறக்கணித்து அயராமல் இயங்கும் படைப்பாளி
ஒரு மனிதனின் இயல்புகள்தான் அவனது விதியைத்தீர்மானிக்கும் என்று வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரி என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். எங்கள் செ.க. என்ற கணேசலிங்கனுக்கும் மிகச்சிறந்த குண இயல்புகள் இருக்கின்றன. கலை இலக்கிய அரசியலில் மாற்றுக்கருத்துக்களுக்கு அப்பாலும் அவர் படைப்பிலக்கியவாதிகளினாலும் விமர்சகர்களினாலும் வாசகர்களினாலும் நேசிக்கப்படுவதற்கு அவரது இயல்புகள்தான் காரணம்.