தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் “வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் இன்று (08) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து பெண்கள் எழுச்சிப் பேரணியாக ஆரம்பமாகி செல்வநாயகம் மண்டபத்தினை வந்தடைந்து மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதி ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் பெண்கள் சார்பான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , கிராமமட்ட அமைப்புகளின் முக்கியஸ்தர்கலென அதிகளவிலானோர் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றதுடன் பெண்களை பாதுகாக்கும் வகையிலான முக்கிய தீர்மானங்களும் நிகழ்வில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.