3/09/2014

| |

மட்டக்களப்பில் "வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்போம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச பெண்கள் தின பேரணி


Photo de Varathan Pasupathy.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினப் பிரகடனம் 2014


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெண்களின் தனித்துவத்திலும், வலுவாக்கத்திலும் நேரடியாக சிரத்தையுடன்; செயற்படும் கட்சியாகும்.


2006ம் வருடம் இனப் பிரச்சினைத் தீர்விற்காக நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் குழுக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசனை வரைபில் பெண்களின் வலுவாக்கம், தனித்துவம், நிலையான சமாதானத்தில் மிகப் பெரிய தூண்களாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டதுடன், அரசியலில் பெண்களுக்கு 33மூ சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டது. இலங்கையிலேயே அரசியலில் பெண்களுக்கு 33மூ சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும். அதனை ஆலோசனை வரைவாக மாத்திரம் குறிப்பிட்டாது 2008ம் வருடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சந்தித்த முதலாவது தேர்தலின் போது பெண்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடுகளை ஒதுக்கி நடைமுறைச் செயற்பாட்டில் காட்டிய கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும்.

பெண்களை எம்மில் இருந்து வேறாக்கிப் பார்ப்பதும், ஆண்களுக்கு ஈடாக பெண்களையோ, பெண்களுக்கு ஈடாக ஆண்களையோ ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையும் முதலில் மாற்றப்பட வேண்டும். ஒன்றை இன்னுமொன்றுடன் ஒப்பிடும் போதே பலம், பலவீனங்களும், ஏற்றத்தாழ்வுகளும் ஆரம்பமாகின்றன.

ஆண், பெண் இருபாலாரும் உடல் அவயங்கள் ரீதியாக வேறுபட்டவர்களே தவிர, சமுகத்தில் எவர் சாதிக்கத் துடிக்கின்றார்களோ அவர்களுக்கான களத்தினை அமைத்துக் கொடுப்பது எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நோக்கமாகும்.

ஒருவர் இன்னுமொருவரை அடக்கியாழ்வதோ, இழிவுபடுத்தி உடல், உள ரீதியாக பாதிப்புக்களை ஏற்படுத்துவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதையும் இன, மத, மொழி, பால், வர்க்க வேறுபாடுகளின்றி சமத்துவமான ஆட்சியினை 2008 – 2012ம் ஆண்டுவரை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருரம், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண சபையினை நடத்திக்காட்டிய பெருமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும் என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவதுடன், சமுகத்தில் பெண்களின் அனைத்து விதமான முன்நோக்கிய சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எது தடையாக வந்தாலும் அதனை சட்டத்தின் முன் வெளிப்படுத்தி தண்டிக்க வேண்டியது அரசினது பொறுப்பாகும்.

அத்தோடு அதிகூடிய வட்டி வீதத்திற்கு கடன்களை வழங்குகின்ற கடன் வழங்குனர்களால்“”அண்மைக்காலமாக எழுந்துள்ள பாரிய பிரச்சினையாக உள்ள நுண் கடன் திட்டத்தின் செயற்பாடுகள், பல குடும்பத்தில் பிரிவுகளுக்கும், பெண்கள் வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதற்கும், குடும்பத்தினையும், ஊரினையும் விட்டு வெளி இடங்களுக்கு தலைமறைவாகச் செல்வதற்கும் தற்கொலை செய்வதற்கும் காரணமாக அமைகின்றது”.

பெண்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்க வேண்டும், வறுமை நிலைமையினை மாற்ற வேண்டும் என்பது உண்மையானதொன்று. மாறாக பெண்களை கடனாளிகளாக மாற்றி அதிக வட்டிகளை அறவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி பெண் சமுகத்தினை சீரழிக்கும் செயற்பாட்டினை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உண்மையில் சிறுகடன் திட்டத்தின் நோக்கமானது கிராம மட்டத்தில் உள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிற்பதாகவே அமைந்திருக்க வேண்டும். மாறாக கிராமத்திலேயே உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும் அதி உயர் வட்டி வீதத்திற்கு கடன்களை வழங்கி அவர்களை மீண்டும் வறுமை நிலைக்கு தள்ளுவதாக அமையக்கூடாது. அத்துடன் கடன் வழங்குனர்கள் அதி உயர் வட்டி வீத வசூலின் மூலம் இலாபம் ஈட்டுவதாகவும் அமையக் கூடாது.
சமுர்த்தி, வாழ்வின் எழுச்சி உள்ளிட்ட பல அரச நுண்கடன் திட்டங்கள் உள்ள போதும் வாராந்தக் கடன் என்றும் 9மூ - 29மூ இற்கு மேல் வட்டி அறவிடுவதுமான கடன் திட்டங்கள் மேலும் மேலும் வறுமை நிலைமையினைத் தோற்றுவிக்குமே தவிர சமுகத்தினை ஆக்கபூர்வமான வழிக்குத் தள்ளாது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இதற்கமைய 2014ம் வருடத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகளிர்களின் கோரிக்கையாக பின்வரும் கோரிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி முன்வைக்கின்றது.

1. சமுக சிந்தையற்ற விதத்தில் அதிக வட்டிக்கு கடன்களைக் கொடுத்து வாராந்தம் வட்டி அறவீடு என்ற பெயரில் பெண்களை வாழ்வியல் ரீதியாக துன்புறுத்தும் கடன் வழங்குனர்களை நெறிப்படுத்துவதுடன், வட்டி வீதங்களை நெறிப்படுத்த வேண்டும்.

2. பெண்களின் சுயதொழில் முயற்சிகளின் நிதித் தேவைக்கு ஏற்ப அரசு, இலகு தவணையில் குறைந்த வட்டி வீதத்தில் இலகு நிதித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்

3. சமுர்த்தி, வாழ்வின் எழுச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அரச திட்டங்களின் ஊடாக நிதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களைக் குறைத்து இலகுமுறையில் துரிதமாக நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. பெண்கள் சிறுவர்களுக்கெதிராக வன்முறைகளில் ஈடுபடும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கென விஷேட விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்.

5. எமது கட்சியினால் முன்வைக்கப்பட்டது போன்று அரசியலில் பெண்களுக்கு 33மூ சதவீத இடஒதுக்கீடு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


6. பாடசாலைகளிலும் அரச அலுவலகங்களிலும் மாணவிகள், பெண்களுக்கெதிரான பகிடிவதைகளையும், பாலியல் துன்புறுத்தல்களையும் தூண்டும் நபர்களுக்கெதிராக துரித சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான குழு அமைக்கப்பட வேண்டும்.

7. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து குடும்பங்களை தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதார வலுவாக்கத்திற்காக விஷேட மானிய, இலகு தவணை முறையிலான வட்டியில்லா நிதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தோடு அவர்கள் எதிர்நோக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வீடு, மலசலகூடம், குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கான அரச திட்டங்களில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.


எனவும் இத்தால் வேண்டி நிற்கின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்
மகளிர் அணி