3/05/2014

| |

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

ஆப்கானிஸ் தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இல ங்கை வரவுள் ளார். இன்று மாலை 6 மணிக்கு இலங்கை வரவிருக்கும் இவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியி ருப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
இவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் கர்சாய், கடந்த மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குழப்ப சூழல் காரணமாக இறுதி நேரத்தில் அவரது விஜயம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.