3/05/2014

| |

கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகிறோம்* கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காலம் எல்லாம் நமது எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் கல்வி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த காலங்களில் நமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பிரதிபலனாக இன்று நமது பிரதேசக் கல்லூரிகள் கல்வி வளர்ச்சியில் தலை நிமிர்ந்து சாதனைகளைப் புரியும் நிலைமைகள் உருவாகி உள்ளன.
அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் விழா அதிபர் ஏ. எம். எம். இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், மாகாண அமைச்சரவை பேச்சாளருமான எம். எஸ். உதுமாலெப்பை இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
நமது பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக பெளதீக வளப் பற்றாக்குறை நிலவியதுடன், ஆசிரியர் பற்றாக்குறையும் இருந்தன. இந்த நிலைமைகளை நமது தேசிய காங்கிரஸ¤க்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காரணத்தினால் படிப்படியாக நிவர்த்தி செய்து வந்துள்ளதுடன் கல்வி செயற்பாட்டில் அரசியல் பேதமின்றி பணி புரிந்துள்ளோம்.
அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் அந்நூர் மகாவித்தியாலயம் ஒரு காலத் தில் இருந்தது. நமது மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாது சம்பளம் பெறும் நோக்கத்துடன் மட் டும் நாட்களைக் கடத்தும் ஆசிரியர்களை இக்கல்லூரியில் குவித்தனர். இதனால் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இக் கல்லூரி செயற்பட்டது. அக்கரைப்பற்று வலய ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் ஒரு கல்லூரியாகவும் செயல்பட்டது. ஏழை மக்கள் வாழும் இப்பிரதேச மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர் அதாஉல்லா பெளதீக வளம் மாத்திரமின்றி சிறந்த ஆளுமை உள்ள அதிபர் களையும், ஆசிரியர்களையும் வழங்கியதால், குறுகிய காலத்தில் இக்கல்லூரி மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு இப்போது பல சாதனைகளைப் புரிந்து வருவதுடன், வெளி இடங் களில் இருந்து இக்கல்லூரிக்கு மாணவர்கள் சேர்ந்து கொள் ளும் நிலையில் உயர்ந்துள் ளதையும், இக்கல்லூரின் சாதனைகளையும் நினைக்கும் போது உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நமது பிரதேச கல்வி தொடர்பாக உண்மைக்கு உண்மையாக நல்ல எண்ணத் துடன் மேற்கொண்ட எல்லா விடயங்களும் இறைவனின் உதவியால் நல்லதாக நடைபெற்று வருகின்றன.
இக்கல்லூரியின் துரித வளர்ச்சிக்கு உதவி வரும் அதிபர், ஆசிரியர்களையும், பாடசாலை சமூகத்தினரையும் நமது மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இது தொடர்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அட்டாளைச் சேனைப் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை எனக் குறிப்பிட்டார்.
இன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் 2 அல்லது 3 ஆசிரியர்கள் தேவை என்று கூக்குரல் இடுகின்றோம். பொத்துவில் கோட்டத்தில் உள்ள அல்- இஸ்ராக் மகா வித்தியாலயத்தில் 700 மாணவர்கள் உள்ளனர். 27 ஆசிரியர் வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படா மல் உள்ளது. இதனால் கல்லூரியின் அதிபர் ஒவ்வொரு கூட்டங்களிலும் தனது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றார். பொத்துவில் பிரதேச பிள்ளைகளின் கல் விக்கும் நாங்களே பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. பொத்துவில் பிரதேச பாட சாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக பொத்துவில் பிரதேசத்தில் பாடசாலை கூரைகளின் மேல் ஏறி அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இறக்காமம், வரிப்பத்தான் சேனை பிரதேச பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஆசிரியர்களை நியமியுங்கள் என மக்களும், மாண வர்களும் போராட்டங்கள் நடாத்தி பாடசாலைகளை பகிஷ்கரிக்கின்றனர். திருமலை, மட்டக்களப்பு மாவட் டங்களில் பல பிரதேசங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் சில பிரதே சங்களில் ஆசிரியர்கள் மேலதிகமாகவும், சில பிரதேசங்களில் ஆசிரியர்கள் வெற்றிடங்களும் நிலவுகின்றன. ஆசிரியர்களை தூர இடங்களில் இடமாற்றம் செய்து அவர்களிடம் இருந்து சிறந்த கல்வியை நாம் பெற முடியாது. கணவன் அம்பாறை மாவ ட்டத்திலும், மனைவி, திருமலை மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள் இட மாற்றப்பட்டனர். சமூகத்தில் பல தியாகத்தின் மத்தியில் நமது பிள் ளைகளை ஆளுமையுள்ளவர்களாக மாற்றும் ஆசிரியர்களின் மனம் வேத னைப்படாத வகையில் நாம் இட மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
அருகில் உள்ள வலயங்களுக்கிடையில் குறுகிய தூரத்தில் ஆசிரிய இடமாற்றத் தினை மேற்கொண்டு நமது பக்கத்தில் உள்ள பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.
இப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் விரைவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நமது ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாத முறையில் ஆசிரியர் சமப்படுத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இவ்வாறு அருகில் உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை பகிர்ந் தளிப்பதன் மூலமாக இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.
பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் பேசும் போது கோணாவத்தை கிராமம் அபிவிருத்தியில் புறக்கணிக் கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். கோணாவத்தை கிராமத்தில் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார். ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை, கொணாவத்தை பாலம், வீதிகள், மின்சாரம் உட்பட பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் மிகுதியாக உள்ள அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் மழை வரும் காலத்தில் வடிகான்கள் அமைக்கப்படாத காரணத்தால் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் வரும் போது நமது மக்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரச அதிகாரிகளையும் திட்டுவார்கள். நமது பாடசாலைகளில் அகதிகளாக வெள்ள காலத்தில் தஞ்சம் அடைந்தனர். வெள்ள நிவாரணங்களுக்கு அட்டா ளைச்சேனை பிரதேச சபை, பிரதேச செயலகம் பெருந் தொகை நிதியினை ஒவ்வொரு வருடமும் செலவு செய்து வந்தன. தற்போது திட்டமிட்ட முறையில் வடிகான் அமை ப்பும், வீதிகளும் அமைக்கப் பட்டதால் கடந்த மூன்று வருட காலமாக வெள்ளத் தினால் நமது பிரதேசம் பாதிக்கப்படாமல் உள்ளது. பல ஆண்டு காலமாக வெள் ளத்திற்குள் பாதிக்கப்பட்ட நமது மக்கள் தற்போது மழை காலத்தில் நிம்மதியாக வாழும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த ஏழை மக்களின் பிரார்த்தனைகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவினால் எனக்கு வழங்கப்பட்ட இந்த அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களு க்கும் பணி புரிந்து வருகின்றேன். நான் எனது பிரதேசத்திற்கும் முடிந்தளவு பணி புரிந்துள்ளேன். அவைகளுக்கு இறை வனின் ஆசியும், ஏழைகளின் பிரார்த் தனையும் எங்களுக்குக் கிடைக்கும். அரசியல் நோக்கத்துடன் சிலர் எமது அபிவிருத்திப் பணிகளை விமர்சனம் செய்தாலும் நாம் மக்களுக்கு செய்யும் பணிகள் தொடரும். எனது அமைச்சுப் பதவி ஊடாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் முடிந்தளவு உதவி புரிந்துள்ளேன். நானும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தான் அரசியலுக்கு வந்தவன்.
தேர்தல் வரும் போது பல கட்சிகளுக் கும் மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்தது அபிவிருத்தி என வரும் போது எம்மை நாடி வருகின்றனர்.
பல போராட்டங்களு க்கு மத்தியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் 2 வது தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது அரசி யல் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் அதிகார த்தை யாரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும் நமது சமூகத்திற்கு பணி புரிவதற்கு இறைவன் நினை த்தால் இத்தேர்தலில் எங் களை வெற்றி அடையச் செய்வான் அல்லது எங்களின் சேவை நமது சமூகத்திற்கு இனி தேவை இல்லை என்று நினைத்தால் இத் தேர்தலில் எங்களை இறைவன் தோல்வி அடையச் செய்வான் என்றும், மக்கள் எங்களை வெற்றி பெறுவதற்கோ, அல்லது தோல்வி அடைவதற்கு எவ்வ ளவு முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டப்படியே அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படு கின்றன எனக் கூறினேன்.
அரசியல் அதிகாரம் நமக்கு கிடை க்கும் போது நமது மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டியது. நமது கடமையாகும் என எண்ணி பணி புரி ந்து வருகின்றோம். தேசிய காங் கிரஸ¤க்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் நமது மக்களுக்கு நல்ல பணிகளைப் புரிந்து வருகின்றோம். எமக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக நமது மக்களின் நிம்மதியான வாழ்க்கைக் கும், பொருளாதார அபிவிருத்திற் கும் பாரிய பணிகளைப் புரிந்துள் ளதுடன், நமது மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் நமக்கு பக்கத்தில் இருந்து நமது இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்கி உள்ளோம்.
பத்திரிகையாளர்களை நான் எப் போதும் நேசிப்பவன். இறைவன் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதவிகளை வழங்கி உள்ளான். நாம் அப்பதவிகள் ஊடாக நல்லவைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். பத்திரிகை யாளர்கள் எப்போதும் உண்மையான சம்பவங்களை வெளியே கொண்டு வந்து மக்கள் மத்தியில் நல்ல பெய ரைப் பெற வேண்டும்.
இன்று நமது பிரதேசத்தில் பல உண்மைகளையும், யதார்த்தங் களையும் வெளியே கொண்டு வர வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமது பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. நமது பத்திரிகையாளர்களில் பெரும் பான்மையினர் இந்த விடயங்களை கண்ணியமாக செய்வதால் நமது சமூகத்தில் அவர்களுக்கு எப்போதும் கெளரவம் இருந்து வருகிறது. என் னைப் பொறுத்தவரை பத்திரிகையா ளர்களின் விமர்சனங்களை நான் ஏற் றுக்கொள்பவன். நமது பத்திரிகையா ளர்கள். நமது சமூகத்தினதும், பிரதே சத்தினதும் பெயருக்கு களங்கம் ஏற் படாதவாறு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அந்நூர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டிடம் தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். அதாஉல்லா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆகியோரிடம் நிதி உதவி கேட்டுள்ளேன். எதிர்காலத்தில் இந்த எண்ணம் நிறைவேற இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். நkர் அட் டாளைச்சேனை பிரதேச சபைத் தவி சாளர் எம். ஏ. அன்சில், அக்கரைப்பற்று பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் கியாஸ் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.