3/29/2014

| |

ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

ஏ.எவ்.பி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி
இந்தியா நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக எ.எவ்.பி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் அதே வேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார்.
நாம் இந்தப் பிரேரணையை நிராகரிக்கிறோம். இது எங்கள் நாட்டின் நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு தீங்கிழைக்கின்றது. இப்பிரேரணை எவ்வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரான்ஸ் தேசத்து செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து நான் மனதைரியத்தை இழக்கவில்லை. நான் ஆரம்பித்த நல்லிணக்கப் பாட்டு செயற்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்ப டுத்தப்படும் என்று இந்த செய்தி சேவைக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு 23 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்து நிறைவேறியது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்டாகக் கூறப்படும் பாரதூரமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கான காலம் இப்போது தோன்றியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்த வாக்களிப்பின் போது இந்தியா நடுநிலை அளித்தது அந்நாடு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இடம்பெற்றிருப்பது குறித்து தாம் மனநிறைவடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தமை எங்கள் நாட்டுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றும் கூறினார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரி இந்தியா இந்த வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த ஒரு இராஜதந்திர வெற்றி என்று கூறினார்.
இந்த அமெரிக்க பிரேரணை எங்கள் நாட்டின் இறைமைக்கு மாறானது என்றும் இந்த அநாவசிய தலையீட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கை திட்டவட்டாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் உள்ளூரில் திட்டமிட்டு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு பல முக்கிய பரிந்துரைகளை இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்மொழிந்துள்ளது என்றும் இதனை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நான் இதனை நடைமுறைப்படுத்துவற்கு தீர்மானி த்திருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார்.
அமெரிக்கா தனது இந்த பிரேரணையை ஆதரிக்க உதவிகோரி பாரிய பிரசாரங்களை செய்ததனால் ஆரம்பம் முதல் இலங்கை ஆதரவற்ற நிலையிலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்கு 12 மேற்பட்ட நாடுகள் ஆதரித்த போதிலும் அன்று இலங்கை சார்பில் ஒரு நாடு கூட இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.