நியூயார்க்கில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து அருகருகாக இருந்த இரு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன.
ஈஸ்ட் ஹார்லம் மாவட்டத்தில் உள்ள பார்க் அவன்யூவில், 5 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு அங்கு தீயை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கிராண்ட் செண்ட்ரல் நிலையத்துக்கான அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.