பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டின் கீழ், சுவிஸ் எழுகை அமைப்பு, கனடா வாழவைப்போம் அமைப்பு, நோர்வே அஸ்கர் பாறும் தமிழர் இணையம், இலண்டன் வொல்கம்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் போன்ற புலம் பெயர் உறவுகளின் அமைப்புகள் தற்போது கிளிநொச்சி மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வருக்கின்றன.
அண்மையில் நோர்வே அஸ்கர் பாறும் தமிழர் இணையத்தின் அப்பியாசக் கொப்பிகள் கிளிநொச்சி தருமபுரம், உழவனூர், தம்பிராசபுரம் ஆகிய கிராம மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த நிகழ்வு கிளிநொச்சி தம்பிராசபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தலைவர் நாவை.குகராசா, கரைச்சி பிரதேசபை உறுப்பினர் புஸ்பராசா, தம்பிராசபுரம் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி, நிர்வாகிகள், கிளிநொச்சி மாவட்ட த.தே.கூட்டமைப்பின் அமைப்பாளர் வேழமாலிகிதன், கட்சியின் கரைச்சி பிரதேச அமைப்பாளரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்