3/05/2014

| |

மாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்திக்க கூடாது என்று தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தும்

மியான்மரில் பீம்ஸ்டெக் மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இரு நாட்டு தரப்பில் உள்ள இலங்கை மீனவர்கள் பிரச்னை , ஈழத்தமிழர் விவகாரம், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஆகியவை குறித்து அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது.
மாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்திக்க கூடாது என்று தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தும், அதை பிரதமர் பொருட்படுத்தாமல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும், இந்த சந்திப்பு நடக்கும் அதே நாளில், தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இலங்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், இதனை வீழ்த்தி தீர்மானத்தை தோல்வி அடைய செய்வோம் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு தயார்: இது குறித்து ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயக்க கூறியதாவது; ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான 4 நாடுகள் தாக்கல் செய்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சந்திக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,' என்றார்.

மனிதாபிமானம் வேண்டும்: தமிழக மீனவர்களை இலங்கை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும், இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங், ராஜபக்சேவிடம் பிரதமர் வலியுறுத்தினார். மேலும் ஐக்கியநாடு மனித உரிமை கமிஷன் தீர்மானம் குறித்து பிரதமர் , பக்சேவிடம் எந்தவொரு உறுதியும் கொடுக்கவில்லை.