3/21/2014

| |

கிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ் பேசும் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்

தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு வந்தறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளுக்கு உபவேந்தரிடமிருந்து உரிய பதில் எட்டப்பட்டாமையினால் அடுத்த இரு வாரங்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீமானித்துள்ளதாக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.கோமகன் தெரிவித்தார்
கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் தங்கியிருந்த இரு மாணவ குழுக்களிடையே இன்று அதிகாலை இடம்பெற்ற மோதலின் எதிரோலியாக காலை முதல் பல்கலைகழக பேரவைக் கட்டடத்திற்கு முன்னால் க தமிழ் பேசும் மாணவர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பொலிஸார் வெளியேறவேண்டும், உள்ளக விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முறையில் மறுசீரமமைப்புச் செய்ய வேண்டும், முதலாம் வருட மாணவர்களைத் தாக்கிய சிரேஷ்ட மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனஈர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதையடுத்து பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவிடம் கேட்டபோது
“பொலிஸாரை அகற்றுவது மற்றும் பல்கலைக் கழக விடுதி வழங்களை மறுசீரமைப்பு தொடர்பாக உடனடியாக எந்த தீர்க்கும் வரமுடியாது உரிய அதிகாரிகளிடம் பேசுவதற்காக கால அவகாசம் தேவை.
ஆனால் முதலாம் வருட மாணவர்களை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வகுப்புத்தடை மற்றும் விடுதியில் தங்குவதற்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இரண்டு மாணவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்னது “ என்றார்.