3/20/2014

| |

முதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்புக்குள் குத்துவெட்டுக்கள் தீவிரம்

  முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு!!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக அவர் சார்ந்த கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தலைவர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலி. கிழக்கு பிரதேச சபை தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளருமான அன்னலிங்கம் உதயகுமார் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலி. கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை!
முதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது
.
அதாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபையின் 13வது திருத்தச் சட்டதிட்டங்களை மீறியும், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.
அத்தோடு, பிரதம செயலாளருடைய உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதாகக் தெரிவித்தும், தன்னுடைய உரிமைப் பெற்றுக்கொள்ள நீதிதமன்றம் உதவ வேண்டுமென்றும் பிரதம செயலாளரினால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.