3/02/2014

| |

எனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்கி


எனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார் விக்கி

விரும்பாவிடின் அடுத்த நிமிடமே கொழும்பு திரும்பவும் தயாராம்


தனக்கு எதிராகத் தமிழ்க் கூட்டமை ப்பிற்குள் சதி நடை பெறுவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராகத் தான் இருப்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பவில்லை என்பதை வெளிப் படையாகவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். இத்தகைய சுலபமான தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். இத்தகைய சுலபமான வழியொன்று இருக்கையில் பின்புறமாக நின்று கதைபேசி ஏன் கஷ்டப்பட்டு சதி வேலைகளில் ஈடுபடுகிaர்கள் எனவும் அவர் நேரடியாகவே கேள்வியொன்றினையும் எழுப்பியுள்ளார்.
அவரது இந்த மன ஆதங்கத்தை அவரே ஒரு வாராந்த ஆங்கில நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விசேட பொதுச் சபையைக் கூட்டி -தன்னை விலக்குவதாகத் தீர்மானம் ஒன்றை எடுத்தால் தான் அடுத்த நிமிடமே கொழும்பிற்குத் திரும்பிவிடுவேன் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனைச் செய்ய முடியாவிட்டால் தனக்குத் தரப்பட்ட பணியைச் செய்ய உதவி செய்யுங்கள் எனவும் அவர் தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடக பேட்டியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னால் பயனில்லை எனத் தமிழ்க் கூட்டமைப்பு உணருமாக இருந்தால் தான் சந்தோஷமாக வெளியேறுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தனக்கு எதிராகத் தமிழ் கூட்டமைப்பிற்குள் சதிவேலைகள் நடைபெறுகிறது என்பதை முதலமைச்சர் முதற்தடவையாக வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டுள்ளார். இவ்வாறு தமக்குள்ளே பதவி, அதிகாரப் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்து வருவது வேடிக்கையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.