மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் விவேகானந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஆற்றில் நீராடச்சென்றபோது இன்று(13) மரணமடைந்துள்ளார்.ஆனந்தன் அரவிந்தராஜ்(வயது 15) என்ற சிறுவனே தும்பங்கேணி ஆற்றில் குதித்தபோது கல்லில் அடிபட்டு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நண்பர்களுடன் நீராடச்சென்ற வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.சடலம் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.