3/31/2014

| |

கிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது நினைவு தினம்







2004 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம்தான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவக் குரல்கள் ஓங்கி ஒலித்த மாதமாகும். சுமார் 6 ஆயிரம் போராளிகள் ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. இந்த தனித்துவக் குரல்களை பூண்டோடு அழித்துவிட்ட  பாசிசப் புலிகள் தங்கள் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்த்தேசியமா? கிழக்கின் தனித்துவமா? என்ற கன்னை பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நின்ற போது எங்கள் ராஜன் சத்தியமூர்த்தி கிழக்கின் தனித்துவத்திற்காக நிமிர்ந்து நின்று தன்னுயிரை ஈந்தார். 

கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியலுக்காக உறுதுணையாக நின்ற சத்தியமூர்த்தி அவர்கள் சிந்திய உதிரத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற தனித்துவக் கட்சி உதயமானது. ஒருசில  வருட காலத்தினுள் இலங்கை அரசியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த புதிய வரலாற்றை ரி.எம்.வி.பி. படைக்க சத்தியமூர்த்தி போன்றவர்களின் தொடர்ச்சியாக வந்த சிந்தனையே காரணமாகும். ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை புலிகள் கொலைசெய்ததின் ஊடாக எதை சாதிக்க நினைத்தார்களோ அது கிழக்கு மண்ணில் வேகவில்லை. அவரைக் கொன்றது மட்டுமன்றி புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து சன்னதமாடினர் புலிகள். 

பிணந்தின்னிப் பிரபாகரனின் அந்த வெறியாட்டம் இன்று முடித்துவைக்கப்பட்டமைக்கும்  கிழக்கு பிளவை அணுகுவதில் யாழ்ப்பாண மேலாதிக்கம் காட்டிய சண்டித்தனமே அத்திவாரமிட்டது  . ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இழந்த அவரது குடும்பம் புலிகளின் கொலைக்கரத்தில் இருந்து தப்பிக்க மாதக்கணக்கில் வீடுவாசல்களை விட்டு காடுமேடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. காடு மேடு மட்டும் அல்ல கடல்கடந்தும் கூட அவர்களது அலைச்சல்கள் தொடர்ந்தது. 

 வரலாறு விழித்துக்கொண்டபோது மட்டக்களப்பு மக்கள் அன்னாரது கனவை நனவாக்கியுள்ளனர். கிழக்கின் தனித்துவத்தின் அடையாளமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் களமிறங்கிய போது அன்னாரது மகளான சிவகீதா அவர்களை மட்டக்களப்பு மாநகர மேயராக்கி மகிழ்ந்தனர்; தொடர்ந்து வந்த கிழக்கு மாகாண சபைதேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சந்திரகாந்தனை கிழக்குமக்கள் முதலமைச்சராக்கி மகிழ்ந்தனர்.  மக்கள். தமிழ் முஸ்லிம் உறவின் நாயகனாகச் செயற்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இன்று இனமத வேறுபாடுகளைக் கடந்து கிழக்கு மாகாண மக்கள் நினைவு கூருகின்றார்கள்.



»»  (மேலும்)

| |

‘அப்பா’ குறும்படம்

விதுசனின் இயக்கத்தில் ‘அப்பா’ குறும்படம் இன்று (30.03.2014) செங்கலடியில் இருக்கும் செல்லம் தியேட்டரில் வெளியிடப்பட்டது  இவ்விழாவிற்கு பேராசிரியர் மெளனகுரு, இயக்குனர் விமல்ராஜ், உதய ஸ்ரீதர், வைத்தியர் வேலாயுதம் பிள்ளை, செல்லம் தியேட்டர் உரிமையாளர் ராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனா்.

இக்குறும்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கம்  விதுசன். ஒளிப்பதிவு விவியான் ட்ரிஷான் மற்றும் செல்வகுமார்  இசை சஞ்ஜித் லக்ஸ்மன் இக்குறுபடத்தில் முக்கிய பாத்திரங்களாக ஸ்ரீதரன், அகிலன், செல்வராஜா போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

»»  (மேலும்)

3/29/2014

| |

ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்

ஏ.எவ்.பி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி
இந்தியா நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை தாம் முற்றாக நிராகரிப்பதாக எ.எவ்.பி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் அதே வேளையில் தான் எங்கள் நாட்டுக்கே உரித்தான நல்லிணக்கப்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அறிவித்தார்.
நாம் இந்தப் பிரேரணையை நிராகரிக்கிறோம். இது எங்கள் நாட்டின் நல்லிணக்கப்பாட்டு முயற்சிகளுக்கு தீங்கிழைக்கின்றது. இப்பிரேரணை எவ்வகையிலும் எமக்கு உதவப் போவதில்லை என்று ஜனாதிபதி பிரான்ஸ் தேசத்து செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து நான் மனதைரியத்தை இழக்கவில்லை. நான் ஆரம்பித்த நல்லிணக்கப் பாட்டு செயற்பாடு தொடர்ந்தும் நடைமுறைப்ப டுத்தப்படும் என்று இந்த செய்தி சேவைக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் குறிப்பிட்டு ள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணைக்கு 23 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்து நிறைவேறியது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையில் இரு தரப்பினரும் மேற்கொண்டாகக் கூறப்படும் பாரதூரமான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கான காலம் இப்போது தோன்றியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்த வாக்களிப்பின் போது இந்தியா நடுநிலை அளித்தது அந்நாடு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக இடம்பெற்றிருப்பது குறித்து தாம் மனநிறைவடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். இந்தியா எங்களுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தமை எங்கள் நாட்டுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்றும் கூறினார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரி இந்தியா இந்த வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த ஒரு இராஜதந்திர வெற்றி என்று கூறினார்.
இந்த அமெரிக்க பிரேரணை எங்கள் நாட்டின் இறைமைக்கு மாறானது என்றும் இந்த அநாவசிய தலையீட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கை திட்டவட்டாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாம் உள்ளூரில் திட்டமிட்டு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழு பல முக்கிய பரிந்துரைகளை இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்மொழிந்துள்ளது என்றும் இதனை தமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நான் இதனை நடைமுறைப்படுத்துவற்கு தீர்மானி த்திருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார்.
அமெரிக்கா தனது இந்த பிரேரணையை ஆதரிக்க உதவிகோரி பாரிய பிரசாரங்களை செய்ததனால் ஆரம்பம் முதல் இலங்கை ஆதரவற்ற நிலையிலேயே இருந்தது என்றும் ஜனாதிபதி கூறினார். இந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னரே அமெரிக்காவுக்கு 12 மேற்பட்ட நாடுகள் ஆதரித்த போதிலும் அன்று இலங்கை சார்பில் ஒரு நாடு கூட இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
»»  (மேலும்)

| |

தென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று

* ஆறு மாவட்டங்களிலும் 58,98,427 வாக்காளர்கள் தகுதி
* 23 அரசியல் கட்சிகள் 42 சுயேட்சைக் குழுக்கள் போட்டி
* 155 பேரை தெரிவு செய்ய 3,704 பேர் களத்தில்
* பாதுகாப்புக்காக 26,000 பொலிஸார்
* கண்காணிப்புப் பணியில் 30,000 பேர்
* தேர்தல் கடமைகளில் 70,000 அரச ஊழியர்கள்

சுதந்திரமாக வாக்களிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டிருப்பதாகவும், எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்கு வாக்காளர்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் ஆளடை யாளத்தை உறுதிபடுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு மாகாண சபைகளின் சார்பில் 155 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 42 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தேர்தல் நடைபெறும் ஆறு மாவட்டங்களிலும் 4,253 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் நேற்று முன்தினமே கொண்டு செல்லப்பட்டன.
608 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணியளவில் தபால் மூல வாக்கு முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப் பதாகவும் அதிகாலையில் சகல தேர்தல் முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப் பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் சுமார் 26,000க்கும் அதிகமான பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்கென விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் கலகத் தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
மூவாயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்கென சுமார் 70 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப் பட்டுள்ள பிரதேசங்களுக்கு கடமை நிமித்தம் சமுகமளித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 102 உறுப்பினர்களைத் தெரிவு 

102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2 ஆயிரத்து 743 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்காக 03 மாவட்டங்களிலுமுள்ள 36 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த ஆகக்கூடிய வேட்பாளர்களாக 1247 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தின் 15 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பதினைந்து இலட்சத்தி 52 ஆயிரத்தி 733 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 946 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். கம்பஹாவில் 13 தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 15 இலட்சத்தி 90 ஆயிரத்தி 76 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் 13 கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைகளைச் சேர்ந்த 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களுத்துறையிலுள்ள எட்டு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 8 இலட்சத்தி 81 ஆயிரத்தி 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

தென் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலிருந்து 53 உறுப்பினர்களைத் தெரிவு 

53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 1057 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இம் மாகாணத்தின் 21 தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 18 இலட்சத்தி 73 ஆயிரத்தி 804 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
காலி மாவட்டத்திலிருந்து 22 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான 14 அரசியல் கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைக் குழுக்களிலிருந்தும் 450 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளிலுமிருந்தும் 8 இலட்சத்தி 9 ஆயிரத்தி 882 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 17 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 அரசியற் கட்சிகள் மற்றும் 05 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 380 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடு கின்றனர். இம்மாவட்டத்தின் 07 தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 6 இலட்சத்து 08 ஆயிரத்தி 524 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 09 கட்சிகள் மற்றும் 04 சுயேச்சைகளைச் சேர்ந்த மிகவும் குறைந்த வேட்பாளர்களான 221 பேர் போட்டியிடவுள்ளனர். இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 4 இலட்சத்தி 55 ஆயிரத்து 398 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு, கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் சுமுகமான முறையில் நடைபெற்றது. இம்முறை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 796 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
கொழும்பில் 175 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோயல் கல்லூரியில் 74 நிலையங்களிலும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் 53 நிலையங்களிலும் இஸிபத்தான கல்லூரியின் 48 நிலையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும்.
கம்பஹா மாவட்டத்தில் 160 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சியகே தேசிய கல்விக் கல்லூரியில் 77 நிலையங்களும் வேயங்கொடை பண்டார நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் 55 நிலையங்களும் பத்தலாகெதர வித்தியாலோக்க வித்தியாலயத்தில் 28 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் 85 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. ஸத்துன்ரத்த தேசியக் கல்விக் கல்லூரியில் 56 நிலையங்களும் திஸ்ஸ தேசிய பாடசாலையில் 29 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
காலியில் 80 நிலையங்களின் கீழ் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலி தொழில்நுட்ப கல்லூரியில் 36 நிலையங்களும் சவுத்லெண்ட் வித்தியாலயத்தில் 32 நிலையங்களும் மாவட்ட செயலகத்தின் கீழ் 12 நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
மாத்தறையில் 62 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோஹண மத்திய வித்தியாலயத்தில் 24 நிலையங்களும் தொழில்நுட்ப கல்லூரியில் 38 நிலையங் களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் சுச்சி தேசிய பாடசாலையில் மாத்திரம் 46 நிலையங்கள் வாக்குகளை எண்ணுவதற்காக நிறுவப் பட்டுள்ளன தேர்தல் நடைபெறும்.
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஜனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 30ம் திகதி முதல் பெப்ரவரி 06ம் திகதி வரை யில் வேட்பு மனுக்கள் கையேற் கப்பட்டன.
»»  (மேலும்)

3/27/2014

| |

வெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தின் விடிவுக்காக உயிர் நீத்த மறவர்களின் அனுஷ்டிக்கப்பட்டுவரும் வெருகல் படுகொலை ஏபரல் 10 நினைவு நாள் ஏற்பாடுகள் கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வெருகல் மலை மக்கள் பூங்காவில் ஏபரல் 10 நடைபெறவுள்ளது. பிற்பகல் 4.30 மணி தொடக்கம் உயிர் நீத்தவர்களின் நினைவாக விசேட கூட்டமும் வெருகல் மலை மக்கள் பூங்காவில் நடைபெறவுள்ளது.
»»  (மேலும்)

| |

பிரேரணை நிறைவேறியது

th (15)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன

 நாடுகளின் பட்டியல்கள்

ஆதரவு

1.     ஆஜர்ன்டினா
2.      ஒஸ்ரியா 
3.      பெனின்
4.      பொட்ஸ்வானா
5.      பிரேஸில்
6.      சிலி 
7.      கொஸ்டாரிகா
8.      கோர்டிவோரின்
9.      செக்குடியரசு
10.    எஸ்தோனியா
11.    பிரான்ஸ்
12.    ஜேர்மன்
13.    அயர்லாந்து
14.    இத்தாலி
15.    மெக்சிகோ
16.    மொன்டிநீக்ரோ
17.    பெரு
18.    கொரியா 
19.    ருமேனியா
20.    மாக்கடோனியா
21.    சியாரா லியோ
22.    பிரித்தானியா
23.    அமெரிக்கா

எதிர்

1.    அல்ஜீரியா
2.    சீனா
3.    கொங்கோ
4.    கியூபா
5.    கென்யா
6.    மாலைத்தீவு
7.    பாகிஸ்தான்
8.    ரஷ்யா
9.    சவூதி அரேபியா
10.   ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
11.   வெனிசூலா
12.   வியட்னாம்

நடுநிலை

1.    புருக்கினோ பாசோ 
2.    எத்தியோபியா
3.    காபன்
4.    இந்தியா
5.    இந்தோனேஷியா
6.    ஜப்பான்
7.    கஸகிஸ்தான்
8.    குவைத்
9.    மொரோக்கோ
10.   நமீபியா
11.   பிலிப்பைன்ஸ்
12.   தென்னாபிரிக்கா

ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கம் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதம்

ஆபிரிக்க நாடுகள்                                                                   13
ஆசிய பசுபிக் நாடுகள்                                                          13
இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள்        8
மேற்கு ஐரோப்பிய நாடுகள்                                                 7
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்                                                6
»»  (மேலும்)

| |

'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' : இந்தியப் பிரதிநிதி

'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இருந்து தாம் விலகி இருப்பதாக இந்தியா அறிவித்தது.
வாக்கெடுப்புக்கு முன்னதான விவாதத்தின் போது உரையாற்றிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இந்தியத் தூதுவர் திலிப் சின்ஹா அவர்கள், இந்த தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அதனை சிக்கலாக்கிவிடும் என்பதால், இதற்கான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகி இருப்பது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.
இலங்கையால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவான பங்களிப்பை வழங்குவதற்குப் பதிலாக இந்த தீர்மானம் அவற்றின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்திவிடும் என்று இந்தியத் தூதுவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாட்டுக்கும், தனது நாட்டின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து தேசிய பொறிமுறைகள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க வழிகள் இருக்கின்றது என்று இந்தியா நம்புவதாகவும், ஆகவே ஐநா கவுன்சிலின் முயற்சிகள், இலங்கை தானே தனது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான, சுதந்திரமான, நம்பகமான தேசிய மட்டத்திலான பொறிமுறை மூலம் புலனாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க அனுசரணையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வகையிலான அணுகுமுறை என்பது தேசிய இறைமையையும், நிறுவனங்களையும் மதிப்பிழக்கச் செய்வதுடன், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும் என்று இந்தியா நம்புவதாகக் கூறிய அவர், ஆக்கபூர்வமான சர்வதேச ஊடாட்டத்தையும், ஒத்துழைப்பையும், விட்டு விலகிச் செல்வதற்கான எந்த நகர்வும், மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கான ஐநா கவுன்ஸிலின் முயற்சிகளை குலையச் செய்துவிடும் என்றும் கூறினார்.
இந்திய தூதர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் இங்கு கேட்கலாம்.
»»  (மேலும்)

| |

தாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை

தாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை

ஜெனீவா முடிவுகள் எதுவந்தாலும் நாம் பொருட்படுத்தப் போவதில்லை - ஜனாதிபதி
* தேர்தல் வெற்றியின் மூலம் உலகுக்கு தெளிவான செய்தியை மக்கள் வழங்க வேண்டும்
* இரு மாகாணசபைகளிலும் வெற்றி நிச்சயம்: மக்கள் வெற்றியின் பங்காளிகளாக வேண்டும்
தாய்நாட்டை மீண்டும் சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை என்ற செய்தியை எதிர்வரும் 29 ஆம் திகதி உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
28 ஆம் திகதி ஜெனீவாவில் நாம் தோல்வியுற்றாலும் 29 ஆம் திகதி நாட்டில் வெற்றி பெறுவோம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வெற்றி நாட்டினதும் மக்களதும் வெற்றியாகுமெனவும் தெரிவித்தார்.
மாத்தறை அக்குறஸ்ஸவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, டளஸ் அழகப்பெரும உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி :-
மாத்தறையில் திரண்டிருக்கும் சனத்திரளை நோக்கும் போது மக்கள் கருத்தை எம்மால் சரியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் இன்று எனது நண்பரான மஹிந்த விஜேசேகரவைப் பார்த்து சுகம் விசாரிக்கச் சென்றேன். அப்போது அக்குறஸ்ஸ குண்டு வெடிப்புச் சம்பவம் எனது நினைவில் மீண்டும் வந்தது. இந்த சம்பவம் இடம்பெற்று ஐந்து வருடங்களும் 15 நாட்களும் நிறைவு பெற்றுள்ளன.
அச்சம்பத்தில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். அமைச்சர் பெளசி மயிரிழையில் உயிர் தப்பினார் என்பது எமக்குத் தெரிந்ததே. இந்த சம்பவத்துக்குப் பின் மூன்று மாதங்களில் இச்சம்பவத்துக்குக் காரணமான பிரபாகரன் உட்பட பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக ஒழிக்க முடிந்தது.
நாம் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை. இதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது ஏனைய தமிழ் மக்களுக்கு எதிராகவோ யுத்தம் செய்ய வில்லை. நாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். பயங்கர வாதத்தை அதன் மூலம் முற்றாக ஒழித்தோம். முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு மக்கள் எம்மிடம் பயங்கரவாதத்தை ஒழித்துத் தருமாறு கேட்டனர். மக்களுக்கு அன்று நாம் வழங்கிய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள். தேர்தலை ஒத்திவைப்பர். அல்லது தேர்தலை நடத்தாமல் விடுவர். தேர்தல் என்பதையே மறந்து அதனால் 17 வருடங்கள் நாம் காத்திருக்க நேர்ந்தது. இக்காலங்களில் நாம் பல இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். எனினும், 17 வருடங்களின் பின்னர் நாம் பதவியேற்று அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி யுள்ளோம். நாம் உரிய காலங்களில் தேர்தலை நடத்தியுள்ளோம். எமக்குத் தேர்தலுக்கு எந்தவித பயமுமில்லை.
நாம் இனியும் தேர்தல்களை பின்தள்ளவோ முன்தள்ளவோ போவ தில்லை. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவோம் இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் 2016 லேயே நடத்தப்படும். நாம் 2010 ல் தேர்தலின் போது மக்களுக்கு மஹிந்த சிந்தனை கொள்கை மூலம் இந்த நாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்வதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் தெரிவித்ததை இப்போது நிறைவேற்றி வருகின்றோம்.
ஜெனீவாவில் 48 வாக்குகளும் எமக்கு எதிராக அளிக்கப்பட்டாலும் நாம் அதனைப் பொருட்படுத்தப் போவதில்லை. இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கவோ தாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிபணியச் செய்யவோ நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதை நாட்டு மக்களுக்கு நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். முதல் நாளில் நாம் ஜெனீவாவில் தோல்வியுற்றாலும் மறுநாள் தாய்நாட்டில் நாம் வெற்றியைத் தழுவுவோம். ஜெனீவாவை நாம் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை.
கியூபா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஜெனீவாவிலிருந்து 60 ற்கு மேற்பட்ட தடவைகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களில் நாகவிஹாரைக்கு நாம் வழிபட செல்ல முடியாத காலம் இருந்தது. தலதா மாளிகை, ஸ்ரீபோதி, சோமாதேவி போன்ற வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. தேரர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். வடக்கிலிருந்து சிங்கள - முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டனர். அப்போதெல்லாம் மத நல்லிணக்கம் பற்றி எவரும் பேசவில்லை.
இந்த அத்தனை அழிவுகளையும் நிறுத்தி நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பி இன - மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகையில் எமக்கு சேறு பூசுகின்றனர். நாட்டைச் சீர்குலைத்து அரசாங்கத்தை கவிழ்ப்பது அவர்களது நோக்கமாகவுள்ளது. நாம் பிறந்து, வாழ்ந்து, அடக்கம் செய்யப்படும் இந்த தாய்நாட்டை அனைவரும் நேசிக்க வேண்டும். இந்த மண்ணை நாம் கெளரவப்படுத்த வேண்டும்.
இதுவே எமது பலமும, தேவையுமாகும். போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இந்த நாட்டை ஆக்கிரமித்து கைப்பற்ற முடியாமற்போனது. இதன்போது எமது தலைவர்கள் மன்னர்களை நாம் இழக்க நேர்ந்தது. இன்றும் அதனையே செய்யப் பார்க்கின்றனர்.
இன்று சிலர் வாழ்க்கைச் செலவு அதிகாரிப்பு பற்றி பேசுகின்றனர். 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்த எம்மால் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வழிசெய்யவும் முடியும். அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பியுள்ள இந்த அரசாங்கத்துக்கே அதனையும் மேற்கொள்ள முடியும் என்பதை நாம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றோம்.
எதிர்க் கட்சியினர் மக்களுக்குச் சொல்வதற்கு எதுவுமில்லாத போது சேறுபூசுவதையே தொழிலாகச் செய்கின்றனர். நம் பிள்ளைகளுக்கு இந்த நாட்டைப் பாதுகாத்து கையளிக்க வேண்டும். இளைய தலைமுறைக்கு சுதந்திரமான சிறந்த நாடாக இதனை வழங்குவது அவசியம். அதற்காக நாட்டைக் கட்டியெழுப்பி எதிர்கால உலகை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காகவே கல்வியிலும் நாம் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளோம்.இவற்றுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
தென் மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் எம் வசமே உள்ளன. மாகாண சபையையும் எமது அதிகாரத்தில் பெற்று இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த வெற்றியின் மூலம் நாம் உலகுக்கு தெளிவான செய்தியொன்றை வழங்க வேண்டும். அது இந்த நாட்டு மக்கள் மீண்டும் இந்த நாட்டை அடிமைப்படுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எமக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்ற செய்தியே அது.
28 ஆம் திகதி நாம் தோல்வியுற்றால் பரவாயில்லை. 29 ஆம் திகதி நாம் பெறும் வெற்றி எமது வெற்றி மட்டுமல்ல, நாட்டினதும் மக்களினதும் வெற்றி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

| |

கிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்

கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களை மேற்கொள்ளும் போது மாகாண இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு மாகாண அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அந்த யோசனையை ஆராய்ந்த மாகாண அமைச்சரவை மேற்படி முடிவை எடுத்துள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா லெப்பை தெரிவித்தார்.
மாகாண அமைச்சரவையின் இம்முடிவு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்கிரமவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சரவை அண்மையில் கூடியது :-
கிழக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் மாகாணத்தில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றமை மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு நிவாரணமாகவும், மாகாணத்தில் வேலையின்மைப் பிரச்சினையை பெருமளவு குறைப்பதற்கும் பெரும் துணையாக அமைந்துள்ளது.
எனினும் இவ்வாறான நியமனங்களின் போது, திறமை அடிப்படையை மாத்திரம் கவனத்திற் கொள்ளும் போது மூன்று இனங்களும் மிக நெருக்கமாக வாழும் கிழக்கு மாகாணத்தில், கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமலும் சிலவேளை ஒன்றோ, அல்லது அதற்கு மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் வெகுவாகப் பாதிப்படையும் நிலைமை காணப்படுகின்றது.
அத்துடன் தூரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த பிரதேச வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுகின்ற போது மிகக் குறுகிய காலத்துக்குள் இடமாற்றம் பெறவோ, அல்லது தொழிலை விட்டுவிடுவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான நிலைமைகளைக் கருத்திக்கொண்டு இனிவரும் காலங்களில் அரச நியமனங்கள் வழங்கப்படும் போது மாவட்ட வெற்றிடங்களையும், மாகாண இன விகிதாசாரத்தினையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதியினைக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை இதற்கான அனுமதியினை வழங்கியதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

நடமாடும் மின்சார சேவை


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைப் பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடமாடும் மின்சார சேவை தி;ங்கட்கிழமை (24) பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது  மின் இணைப்புக்கான படிவங்கள் ஏற்றுக்கொள்ளல், புதிய மின் இணைப்புக்கள் வழங்கல் மின் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் மின்சார சேவை தொடர்பான ஏனைய பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்கப்பட்டன. இந்த சேவைகளை இப்பிரதேசத்தினைச் சேர்ந்த 150 இற்கும்  மேற்பட்ட மக்கள் பெற்றுக்கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு பிரதேச  மின் பொறியிலாளர் திருமதி அனிதா பரமானந்தம், பிரதேச பராமரிப்பு மின் பொறியிலாளர் என்.தேவரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை களுவாஞ்சிகுடி மின்சாரசபை அத்தியட்சகர் கே.அனுசாந்தன் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

3/26/2014

| |

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது அரசியலில் தலையிடுவதன் மூலமாக இங்குள்ள நிலைமையை மோசமாக்கி விட கூடாது.

இன்று கொழும்பு மாவட்டத்தில் நாம் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது மக்களினதும், வர்த்தகர்களினதும் பாதுகாப்பு முக்கியமானதாகும். வாக்குகளை பெறுவதற்காக வடக்கு அரசியலை இங்கு மையமாக கொண்டு செயல்பட முனைந்தால் கொழும்பில் வாழும் வட, கிழக்கு மக்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வெள்ளவத்தை பொலிவுட் உணவகத்தில் தொழிலதிபர் கே.சுகுமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களிலே கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் தமக்கு தேவையானவர்களுக்கும் சேவையாற்றியவர்களுக்கும் வாக்களித்து வந்தனர். இதன் மூலமாக கொழும்பு மாவட்ட மக்கள் மத்தியிலே அமைதியான சூழ்நிலையே ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று வாக்குகள் பெறுவதற்காக வடக்கு அரசியலை கொழும்பில் நடத்த முற்படுகின்றார்கள். இதற்கு வட மாகாண அரசியல்வாதிகள் துணைபோவார்களேயாயின் காலம் அவர்களது தவறுகளை சுட்டிக் காட்டும். 

வட மாகாணசபை சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆளுநர்களாக இராணுவத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட கூடாது. இராணுவம் - பொது மக்கள் இடங்களை மீளவும் கையளிக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காணாமல் போனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஜெனீவா மூலமாக தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்கப்பெற வேண்டும் என இப்படி பல விடயங்களை தொடர்ச்சியாக நான் வலியுறுத்தி வருகின்றேன். இது வட, கிழக்கு மக்களுக்கான தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் சம்பந்தனையும், முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் நான் பெரிதும் மதிக்கின்றேன். 

இன்று கொழும்பு  மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது அரசியலில் தலையிடுவதன் மூலமாக இங்குள்ள நிலைமையை மோசமாக்கி விட கூடாது. இன்று முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லும் விடுதலைப்புலிகளை தேடுவதாக சொல்லி வட மாகாண மக்களின் அமைதியை இராணுவத்தினர் தொலைத்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது, இதே நிலைமையை கொழும்பு மாவட்டத்தில் ஏற்படுவதற்கு நாம் இடங்கொடுக்க முடியாது. 

தமிழ் மக்கள் தமிழர்களுக்கே வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலரை கடந்த மாநகரசபை தேர்தலுக்கு ஆதரவளிக்க வைத்து கிடைக்கப்பெற்ற இருபத்தெட்டாயிரம் விருப்பு வாக்குகள் மூலமாக இன்று கொழும்பு மாநகரசபையில் பதவி வகிப்பது பெரும்பான்மை இனத்தவர் என்பதையும் தமிழ் தேசியம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலே கல்வி, வீடமைப்பு, அடிப்படை வசதிகள், எனது மக்களின் பாதுகாப்பு அனைத்திலும் மலையகம், வடகிழக்கு கொழும்பு தமிழர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றி வருகின்றேன். இந்த இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாது மக்கள் சிந்தித்து வாக்குகளை பிரித்து செலுத்தினால் அதிகபட்ச தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
»»  (மேலும்)

| |

எடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக பேச்சுவார்த்தை?

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவ்விதமான முன் நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கடந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், மாகாணசபை உறுப்பினர்களினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுககொள்ள முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், இதுவiரியல் தமக்கு தென் ஆபிரிக்க அதிகாரிகள் அழைப்பு விடு;க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
»»  (மேலும்)

3/25/2014

| |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்படும்படி???????????

பத்திரிகைச் செய்தி
தந்தை செல்வாவின் கொள்கைக்கு அமைய தனி ஒரு கட்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் ஆதரிக்க முடியாது
- வீ. ஆனந்தசங்கரி,
sanagaryதந்தை செல்வாவின் பெயரைச் சொல்லி எதையும் செய்யலாம் எனச் சிலர் எண்ணுகிறார்கள்! அவரின் பெயரால் செய்யச் சொல்லும் எல்லாவிடயமும் அன்னாரின் கொள்கையுடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். 
தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த தந்தை செல்வா, அமரர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் எடுத்த முயற்சியின் பலனே தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானது. கூட்டணி உருவாகியது மட்டுமல்ல தந்தை அவர்கள் தனது தலைவர் பதவியை அமரர்கள் தொண்டமான் மற்றும் ஜ.Pஜீ பொன்னம்பலம் ஆகியோருடன் பகிர்ந்துகொண்டு தனது இறுதிமூச்சுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே இருந்து மறைந்தார். அன்னாரின் பெயரால் அமைக்கப்பட்ட 60 அடி உயரமான நினைவுத் தூபி உதயசூரியன் சின்னத்தையே இன்றும் தாங்கி நிற்கிறது. 
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல. தந்தை அவர்கள் அவர்களின் பிரச்சனைகளை முன்வைத்தே தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அவர்களுக்குள் உள்ள வேற்றுமை களையப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்படவேண்டும் என்பதில் தந்தை செல்வா தன் இறுதிமூச்சுவரை விரும்பியிருந்தார். அதைவிடுத்து இன்று பல கட்சிகளாக பிரிந்து செயற்படும் - இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளை மேலும் பிரிவடையச் செய்ய - ஒரு கட்சியினரை மட்டும் ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரில் சிலர் கூறி வருவது வேதனையை அளிப்பதுடன் தந்தையின் இலட்சியத்துக்கும் முரண்படுவதாகவும் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இத்தகைய தீர்மானம் எதுவும் கூடி எடுக்கவில்லை. ஒருசிலரின் விருப்புக்கமைய ஒரு சமுதாயத்தையே தப்பான வழிக்கு இட்டுச் செல்வது ஏற்றுக் கொள்ள முடியாது.  அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்காத அந்த மக்கள் மத்தியில் ஒருபகுதியினரை மட்டும் ஆதரிப்பதானது எமது மறைந்த தலைவர்களை அவமானப்படுத்துவதுடன் மட்டுமல்ல, அத் தலைவர்களுக்கும் - அந்த மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே நான் எண்ணுகிறேன். ஒரு கட்சிக்கு மாத்திரம் பிரச்சாரம் செய்வது வருத்தத்துக்குரிய விடயமாகும் என்பது மட்டுமல்ல குழப்பத்தையும் உண்டு பண்ணும். முதலமைச்சரும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது உடனடியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் குறிப்பாக மலையகம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வேற்றுமையை வளர்க்காது மக்கள் முன்பு வாக்களித்ததுபோல தமக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைப்படி விட்டுவிடுவது நல்லது. அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாத்திரம் ஆதரவு கோருவது எதிர்காலத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கிறேன். தலை இருக்க வால் ஆடும் நிலையினால் கூட்டமைப்பு அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதையும் சுட்டிக்காட்;ட வேண்டுவது எனது கடமையாகும். தந்தை செல்வாவின் கொள்கைக்கு அமைய தனி ஒரு கட்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் ஆதரிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். 

ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் செய்யாது பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து தம்மைத் தனிமைப் படுத்தாது நாடாளாவிய ரீதியில் செயற்படும் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு வழங்கலாம் என ஆலோசனை கூறுகிறேன். இப்பகுதிகளில் வாழும் வடபகுதி மக்கள் எடுக்கும் முடிவு அவர்களை எதிர்காலத்தில் அநாதரவற்ற நிலையை ஏற்படுத்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்படும்படி வேண்டுகிறேன். நிலைமையை உணர்ந்து தெற்கே வாழும் தமிழ் மக்களுக்கு சங்கடமான நிலைமையை உருவாக்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கேட்டுக் கொள்கின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.
»»  (மேலும்)

| |

அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் மீராசாஹிப்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராக பதவி வகித்த  கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,  சாய்ந்தமருது பிரதேசமக்களும் தேசியகாங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று இரவு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


இதன்போது, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கி தரவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளித்ததுடன்  அமைச்சரை  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் ஏ.எல்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றுகையில், "எந்தச் சமூகத்துக்கும் எந்தப் பிரதேசத்திற்க்கும் பாதிப்பு ஏற்படாமல் சாய்ந்தமருது மக்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய வகையில் தனியானதொரு பிரதேச சபை உருவாக்கப்படும். அதற்கான பணிகளை நாம் ஆரம்பித்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
 

இந்நிகழ்வில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், எம்.எல்.ஏ.அமீர், அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபைத்; தவிசாளர் ஏ.எம்.றாசிக்  உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள், சமயத் தலைவர்கள், சமூக பிரமுகர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.


»»  (மேலும்)

3/23/2014

| |

ஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்குமாறு மிரட்டிய புலிப் பினாமிகள்.

ஐ.நா வின் அமர்வுகள்,அமர்க்களங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக் கின்றது.நேற்றைய அமர்வு ஒன்றில் இந்து-பௌத்த சங்கத்தினர் இலங்கையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்து என்பதையும் சுமார் 2 தசாப்தங்கள் புலிகளுக்காக தம்மை அர்ப்பணித்திருந்து நடுத்தெருவில் விடப்பட்டு வன்னியில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் தமிழ் பெண் ஒருத்தியின் வாக்குமூலமாக காணஒளியில் விளக்கியுள்ளனர். இக்காண ஒளி விளக்கத்தின் பின்னர் இந்து-பௌத்த சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் (சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாக கொண்ட ஈசன் என பலராலும் அறியப்பட்டவர்) விரிவான உரை ஒன்றை தமிழில் ஆற்றியிருக்கின்றார்.
இவ்வுரையை செவிமடுத்துக்கொண்டிருந்தவர்களில் மனித உரிமை எனும் போலிப்போர்வைக்குள் ஒழிந்திருக்கும் கி.கிருபாகரனும் அடங்கியுள்ளார். உரை முடிவில் ஈசனை சந்தித்த கிருபாகரன்„நீர் ஐ.நா வில் பேச வருவதானால் ஆங்கிலம் படித்துவிட்டுத்தான் வரவேண்டும்’ என மிரட்டியிருக் கின்றார். தமிழில் பேசியதற்காக தமிழன் ஒருவனை கிருபாகரன் மனித (புலிப்பாசிச) நேயப்பணியாளர் என்ற போர்வையில் மிரட்டியிருக்கின்றார் என்றார் இவர் மனித நேயத்தை அளவீடு செய்யும் அலகு பாசிசம் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் இலகுவாக சொல்வதானால் பாசிசத்தை நேசித்தல் மனிதநேயம் – எதிர்த்தல் மனித உரிமை மீறல் என்பதே கிருபாகரனின் மனித நேயம்.
»»  (மேலும்)