2/14/2014

| |

றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம்  ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் 13.02.2014 அன்று மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கோறளைப்பற் தெற்கு பிரதேச செயலாளர் எல்லைக்குள் அமைந்துள்ள றெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் , கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர், கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர்பற்று திவிநெகும திட்ட இணைப்பாளர் ஆ.தேவராஜா,  கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உத்தியோகத்தர்கள் , மாதர் சங்கம் கிராம அபிவிருத்தி சங்கம் இபாடசாலை அதிபர்கள் மற்றும் தேவாபுரம், பாலையடித்தோணா, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான் கிழக்கு, கிரான் மேற்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும் கலந்து கொண்டனர்.