2/02/2014

| |

வட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக் கட்டம்

புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களைக் காப்பாற்றி உயிர் வாழ வைத்தமைக்கு கைமாறு
புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களைக் காப்பாற்றி உயிர் வாழ வைத்தமைக்கு கைமாறு
சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தி வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் நிறை வேற்றப்பட்டுள்ள தீர் மானமானது அக்கட்சி சொந்தத் தாய் நாட்டிற்குச் செய்து வரும் தொடர்ச் சியான தேசத் துரோகச் செயற்பாடுகளின் உச்சக் கட்டம் என அமைச்சர் ரோகித அபே குணவர்த் தன குற்றஞ்சாடியுள்ளார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு தமிழரும் ஏற்கமாட்டார்கள். வெளிநாட்டில் வாழும் புலி களுக்குச் சார்பான புலம் பெயர் தமிழ் மக்கள் சிலரின் விருப்பிற்கு தாம் பிறந்த சொந்தத் தாய் நாட்டில் வாழ்ந்து கொண்டே அந்நாட்டிற்குத் துரோகமிழைக்கும் தமிழ்க் கூட்ட மைப்பின் தலை வர்கள் மன்னிக்க முடியாத குற்றத் தைப் புரிந்து வருகின்றனர்.
அரசாங்கத் திற்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தொடர்ச்சியாக அவர்கள் பல முனைப்புகளிலும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் செயல்பாடானது அதன் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டுவதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் விரும்பி வரவேற் றதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுமே நிம் மதியாக வாழ வழிசமைத்த இன்றைய அரசாங்கத் திற்கு எதிராகத் தமிழ்க் கூட்டமைப்பு செய்து வரும் போலிப் பிரசாரங்கள் உலக அரங்கில் இனியும் எடு படாது எனவும் தெரிவித் தார். புலிகளின் கொலைப்பட்டியலிலிருந்த கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றி உயிர் தப்பி சுதந்திரமாக அரசியல் செய்து வாயில் வரும் கற்பனைகளையெல்லாம் அறிக்கைகளாக வும், பிரேரணைகளாகவும் தெரிவிக்க இந்த அரசாங்கமே உதவி புரிந்தது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது என்றார்.