மட்டக்களப்பிற்குபெருமைசேர்த்தமனிதர் இந்தியாவிலோஅல்லதுஐரோப்பியநாடுகளிலோபிறந்துபெரும் செல்வாக்குடன் திகழ்பவர்கள் கூட சினிமாஉலகில் சாதிப்பதென்பதுவும் நினைத்துநிற்பதென்பதுவும் பலருக்குமுடியாதகாரியமாகஉள்ளநிலையில் எம் மண்ணில் பிறந்துதனதுமுயற்சியின் பலனாக மூன்றாம் பிறைதொடக்கம் சதிலீலாவதி,மறுபடியும் போன்றமிகமாறுபட்டவிதத்தில் பலபடங்களின் இயக்குனராகவும் முள்ளும் மலரும் போன்றபடங்களில் ஒளிபரப்பாளராகவும் நிலைத்துநின்றுகாட்டியவர் அமரர் பாலுமகேந்திரா.
ஒரேபாணியில் செல்லும் தமிழ் திரைப்படங்களின் மத்தியில் முற்றிலும் மாறுபட்டசிந்திக்கத் தூண்டும் திரைப்படங்களை இயக்குவதுவேஅமரர் பாலுமகேந்திராவில் தனித்தன்மையாகவும் அவரின் நிலைத்துநின்றமைக்குகாரணமுமாகும்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாரின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திப்பதாககுறிப்பிட்டதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,ஒவ்வொருகலைஞனுக்கும் பாலுமகேந்திராஓர் உதாரணம் எனவும் குறிப்பிட்டார்.