மஹிந்த சிந்தனை தொலைநோக்குக்கு அமைய சுதந்திர மான ஒரு சமூகம், பசுமை நிறைந்த ஒரு நாடு, தன்னி றைவு மிக்க எதிர்காலத்துடன் “செழிப்பான இல்லம் , வளமான தாயகத்தினை” உருவாக்குவதற்காக நாட்டில் சகல மனைப் பொருளாதார அலகுகளையும் பங்களிப்பு செய்விக் கும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் இப்போது செயற் படுத்தப்படுகிறது.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிகளை குறிப்பிட்டுக் காட்டும் உத்தியோகபூர்வ இலச்சினையினை உருவாக்கி எம்மோடு இணைந்து கொள்வதற்கு நம்நாட்டு பிர ஜைகளிடம் இருந்து இப்போது விண்ணப்பங்கள் கோரப்படு கின்றன. சிறந்த படைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாவரை பரிசா கக் கொடுக்கப்படும்.
இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை உடரட அபிவிருத்தி அதிகார சபை ஆகிய மூன்று அதிகார சபைகளும் சமுர்த்தி அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம், உடரட கிராமிய புனருத்தாபன திணைக்களம் உட்பட ஐந்து நிறுவனங்களின் கூட்டாக பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திட்டத்தின் பொருட்டாக பொருத்த மான உத்தியோக பூர்வ இலச்சினையினை உருவாக்குவதற்கு இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படு கின்றன.
தனிநபர், குடும்பம், குழுக்கள் மற்றும் முழுச் சமூகத் தினையும் மையமாகக் கொண்ட வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டம் வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய வங்கி வலையமைப்பினை அபிவிருத்தி செய்வதும் மேம்படுத் துவதும், வாழ்வின் எழுச்சி சமுதாயக்கட்டமைப்பினைக் கட்டி எழுப்புதல், மனித வள அபிவிருத்தி என்பன வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான பிரிவுகளா கும். இதன் அடிப்படையில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தின கரன் பத்திரிகையில் கிழக்கின் எழுச்சி என்ற ஒரு அனுபந்தம் மாதாமாதம் வெளியிடப்படுகிறது. இதற்கான அனுசரணையை கிழக்கு மாகாண சபை வழங்குகிறது.
நேற்று லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இந்த விஷேட அனுபந்தத் தின் வெளியீட்டு விழா கிழக்கு மாகாண முதலமைச்சர் எம். நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ் வில் வரவேற்புரை நிகழ்த்திய லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத் அவர்கள், மூவின மக்கள் ஒற்றுமையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் முத லமைச்சரின் தலைமையில் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவு க்கு அமைய அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிற தென்றும், இதன்மூலம் கிழக்கு மாகாண சபை மற்ற மாகாண சபைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் பாராட்டு தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் இலட்சியக் கனவை கிழக்கின் எழுச்சித் திட்டம் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கி றது. அத்துடன் நாடெங்கிலும் மனைப்பொருளாதார அலகு களை ஏற்படுத்தி சுமார் 10 இலட்சம் குடும்பங்களை இன்று வாழவைத்துக் கொண்டிருக்கிறார். சிறுகைத்தொழில் முயற்சி களை ஆரம்பிப்பதற்கும், வீட்டில் வைத்தே சில்லறைக் கடை கள் மூலம் வருமானம் ஈட்டுதல் ஆகிய முயற்சிகளுக்கு சலுகை அடிப்படையிலான வங்கிக் கடனைப் பெற்றுக்கொடுத்தல், வீட் டுத் தோட்டங்களை நடத்தி இலாபம் ஈட்டுவதற்கு நாட்டுப் பண் ணைகளில் இருந்து பயிர்களைப் பெற்றுக் கொடுத்தல், உர த்தை நியாய விலைக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பணி களும் மனைப் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் அமைச்சினால் செய்து கொடுக்கப்படுகின்றது.
தெங்கு அபிவிருத்தி அமைச்சு இவ்விதம் ஒவ்வொரு வீட்டுக்கும் தென்னம்பிள்ளைகளை இல வசமாக விநியோகிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒவ்வொரு வீட் டுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கோழிக் குஞ்சுகளையும் இலவசமாக விநியோகிக்கின்றது. இதேவேளையில் மூன்று தசா ப்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்ளூராட்சி உட்கட்டமைப்பு வசதிகள் என்பன 5,500 மில்லியன் ரூபா செலவில் அபிவிரு த்தி செய்யப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் அறிவித்துள்ளார்.
இவ்விதம் கிழக்கின் எழுச்சி திட்டம் யுத்தத்தினால் பெரும் பாதிப் புக்குள்ளான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் நல்வாழ்வுக்கு ஒரு சிறந்த அடித்தள மாக அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.