யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டமானது சகல துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கின் முதல் முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணசபையினை பொறுப்பெடுத்ததன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சகல துறைகளும் துரிதமாக வளர்ச்சியடைந்தன.மீள்
மட்டக்களப்பு நகரிலே இருக்கும் பஸ் நிலையமானது சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண சபையினை பொறுப்பெடுப்பதற்கு முன்னர் மாடுகள் கூட மழைக்கு ஒதுங்க முடியாத நிலையில் இருந்தது. வெகு தூரத்தில் இருந்து வருகின்ற பயணிகள்கூட மழை பெய்தால் மழையில் நனைகின்ற அளவிற்கு பஸ் நிலையம் இருந்ததனை யாரும் மறக்கமாட்டார்கள்.
முன்னாள கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியில் , “மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம்” நெக்டெப் வேலைத்திட்டத்தின் கீழ் 75மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மீள் அமைப்பதற்கான இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு 01.05.2010 அன்று இடம்பெற்றது.
இன்று சகல வசதிகளும் கொண்ட ஒரு பஸ் நிலையம் அமையப் பெற்றிருப்பதையிட்டு கிழக்கின் முதல் முதலமைச்சருக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.