2/07/2014

| |

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட்சித் தலைவர்கள் ஆலோசனை

அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தல், ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, நாடு தழுவிய தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். காங்கிரசும் அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய புதிய அணி ஒன்றை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்,
இந்த கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம்நடைபெற்றது. டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாக கட்டடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 இடதுசாரி கட்சிகள் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வாடு பிளாக், புரட்சிகர சோசலிஸ்டு) மற்றும் அ.தி.மு.க., சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அசாம் கணபரிஷத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, பிஜு ஜனதா தளம் ஆகிய 11 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேற்கண்ட 11 கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாக, மதவாதத்துக்கு எதிராக மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்தில் ஒரே அணியாக இணைந்து செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலில் ‘கூட்டாட்சி முன்னணி’ என்ற பெயரில் இணைந்து செயல்படுவது என்றும், அதேநேரத்தில் இந்த அமைப்பை 3 வது அணி என்று அழைக்க விரும்பவில்லை என்றும், பின்னர் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து வருகிற 9 அல்லது 10ம் திகதியில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில், பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், சரத் யாதவ், தேவேகவுடா ஆகியோர் முன்னிலையில் புதிய முன்னணிக்கான கூட்டு செயல் திட்டம் தயாரிக்கப்படும் என்று அவர்கள் கூறினார் கள்.
தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் ஒரே மேடையில் கூட்டாக பிரசாரத்தை தொடங்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய தனதாதளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது,
“கடந்த அக்டோபர் மாதத்தில் மதவாதத்துக்கு எதிராக இந்த கட்சி தலைவர்கள் ஒன்றாக கூடினோம். அதன் பின்னர் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது பாராளுமன்றத்தில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக இந்த அணி அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாங்கள் இங்கு ஒன்றாக கூடியிருக் கிறோம்.
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வலு சேர்ப்பதற்காக ஊழலுக்கு எதிராக 6 புதிய சட்டங்களை பாராளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற துடிக்கின்றன. ஆனால், தற்போது நிலவிவரும் அமளியால் அந்த சட்டங்கள் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்று எங்களால் உறுதியாக கூற முடியும்.
ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் குறித்து நீண்ட காலமாக நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். 5 ஆண்டுகாலமாக பதவியில் இருந்து வந்த காங்கிரஸ் இப்போதுதான் இந்த சட்டங்களை கொண்டு வருகிறது. இந்த சட்டம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சுறிகமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். அதே நேரத்தில் தேர்தலுக்காக இந்த சட்டங்களை காங்கிரஸ் பயன்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம்.