2/28/2014
| |
மீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்
| |
இலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆதரவு திரட்டும் பேச்சுவார்த்தைகள் மும்முரம்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள பிரேரணைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முதல் ஜெனீவாவில் இடம்பெற இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இதே வேளை ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு மார்ச் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறுகிறது. இலங்கை தொடர்பான விவகாரம் 2 ஆம் திகதி ஆராயப்படவிருப்பதாக மனித உரிமைப் பேரவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கை குழுவின் தலைவரான அமைச்சர் ஜி. எல் பீரிஸ் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் உரையாற்ற இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இலங்கை குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஜெனீவா மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த குழு உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரசிங்க இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கான இறுதிச் சட்ட முன்னெடுப்புகள் இலங்கைக்குழுவினால் ஜெனீவா மாநாட்டின் போது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த வருடத்தை விட இம்முறை இலங்கைக்கு கூடுதலான நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைக்குழு ஒருமித்த முயற்சியை எடுக்கும் எனவும் இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் முயற்சிகளும் பரந்தளவில் முன்னெடுக் கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் அமுனுகம இந்தியா பயணம்
இதேவேளை அமைச்சர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இந்தியாவுக்கும் எதியோப்பியாவுக்கும் விஜயம் செய்தார். எதிர்வரும் 2ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர் அந்த நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதோடு, அடுத்து அவர் எதியோப்பியா செல்கிறார். அங்கு 5ஆம் திகதி வரை தங்கியிருந்து அந்த நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்திய தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளரும் பங்கேற்க இருப்பதாக அறிய வருகிறது. அதே வேளை ஜெனீவாவுக்கான இலங்கை குழுவில் அமைச்சர் சரத் அமுனுகமவும் இடம் பெற்றுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் கூறின. அடுத்த 4ஆம் திகதி மியன்மாரில் ஆரம்பமாகும் பீட்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்ற இருப்பதாகவும் இதன்போது இந்தியா உட்பட பல நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறினார்.
| |
வந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி
2/27/2014
| |
நாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வெளிநடப்பு
நாவிதன்வெளி பிரதேச சபையின் 34ஆவது மாதந்தக் கூட்டத் தொடர் செவ்வாயன்று பிற்பகல் நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.ஆனந்தன் தலைமையில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான ஏ.பிள்ளையான்தம்பி, எஸ்.குணரெட்ணம், யூ.தேவன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்;தீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ஏ.சுதர்சன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.கே.அப்துல் சமட் உள்ளிட்ட அனைத்து உறுப்பினரின் பங்கேற்புடன் கூட்டத்தொடர் ஆரம்பமானது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்டத் தொடர் இடம்பெறுகையில் நிகழ்ச்சி நிரலில் சபை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை.
இ;ந்நிலையில், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டவாறு கூட்டத்தொடர் நடைபெறவில்லை எனவும் தெரிவித்து விட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
2/26/2014
| |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் நிராகரிப்பு
2/25/2014
| |
மட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரியவென்றே வாழ்ந்தவர் வெபர் அடிகளார்
2/24/2014
| |
முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாதுவது மிகவும் கீழ்த்தரமான் செயலாகும் - காத்தான்குடி மீடியா போரம்
| |
எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்
2/23/2014
| |
அக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும் 1-வது மெய்வல்லுனர் விளையாட்டு விழாவும்
2/18/2014
| |
ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !
| |
மோடி வந்தால் நாடு தாங்காது
இந்திய கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவினரும், அவற்றின் மூளையாக செயல் படுபவர்களும், சர்வதே நிதி மூலதனமும் அதே அளவுக்கு நிலை குலைந்து போயுள்ளன. ஏனெனில் அவை, 1939க்குப் பிந்தைய ஆண்டுகளில் மாபெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட சமயத்தில், பாசிச அடக்குமுறையைக் கட்ட விழ்த்துவிட்டு மக்களின் சுதந்திரத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியும், மக்கள் மீது சொல்லொண்ணா அளவிற்கு ஏற்றப்பட்ட பொருளாதாரச் சுரண்டலையும் தங்கள் கொள்ளை லாபத்தையும் தொடர்வதற்கு, ஹிட்லரின் பாசிசம் எப்படித் தங்களுக்கு உதவியதோ, அதேபோன்று ஆர்எஸ்எஸ் /பாஜக பரிவாரங்களின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதமர் வேட் பாளரை, தங்கள் சார்பில் சிறந்ததொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி வந்தன. நவீன தாராளமய சீர்திருத்தங்களை எவ்வித இடையூறுமின்றி திணித்து மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றமுடியும் என்று அவை நம்பிக்கொண்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று அணி உருவாகி இருப்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “மூன்றாவது அணியின் அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்தலாம்(டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்ரவரி 12, 2014) என்று சர்வதேச கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சி ஒன்று குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்த ஏஜன்சியின் செய்தியாளர், “தேர்தலுக்குப்பின் இந்தியா வில் துண்டு துண்டு கட்சிகளால் அமையும் கூட்டணி அரசாங்கம் பங்குச் சந்தை வணிகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்திடும்,’’ என்றும் கவலைப்பட்டிருக் கிறார். இதற்கும் மேல் ஏதேனும் சொல்லவேண்டுமா, என்ன?
தங்களுடைய இந்த அச்சத்தை மறைக்கக் கூடிய விதத்தில், ஆர்எஸ்எஸ் நாட்டு மக்கள் மீது புதியதொரு சொல் விளையாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அதனுடைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் வளமை குறித்தும் இருக் கிறது. ஆனால், அதன் உண்மையான இலக்கு என்பது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரம்’ என்னும் நிகழ்ச்சிநிரலை மேலும் கூர்மைப்படுத்தி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே யாகும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளன்றே, பாஜக, நாடாளுமன்றத்தில் வகுப்புவாத வன்முறை தடைச் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டதை வெற்றிகரமான முறையில் வரவிடாமல் செய்ததைப் பார்த்தோம். இதற்கு அது கூறிய காரணம் என்ன? அது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்தையே-கூட்டாட்சித்தத்துவத்தையே-மீறுகிறதாம். நாட்டின் தற்போதைய கூட் டாட்சிக் கட்ட மைப்புக்கு பாஜக வக்காலத்து வாங்குவது வெறும் கண்துடைப்பேயாகும். ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளே வேறாகும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் குருஜி என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட எம்எஸ் கோல்வால்கர், அளித்துள்ள `இந்து ராஷ்ட்ரம்’ என்கிற தத்துவார்த்தக் கட்டுமானமும் (We, Or Our Nationhood Defined, 1939, Fourth Edition, 1947) மற்றும் இக்குறிக்கோளை எய்துவதற்கு, `சங் பரிவாரம்’ ஏற்படுத்தியுள்ள ஸ்தாபனக் கட்டமைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்பே, நம் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள கூட் டாட்சிக் கட்டமைப்பை குழிதோண்டிப் புதைத்திட வேண்டும் என்று கூறி யிருக்கின் றன. தற்போதுள்ள அனைத்து `சுயாட்சி’ மற்றும் `அரை சுயாட்சி’ மாநிலங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டு, `பாரதம்’ என்கிற ஒரே மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், `ஒரே நாடு, ஒரே மாநிலம், ஒரே நாடாளுமன்றம், ஒரே அரசாங்கம்’ ... எனப் பிரகடனம் செய்திட வேண்டும் என்றும், நாடு மாநிலங்களாகக் கூறுபடுத்தப்படாத ஒரே வடிவ அரசாங்கம் நிறுவப்படக்கூடிய விதத்தில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, மீளவும் எழுதப்படவேண்டும். என்றும் அவை தெளிவாகவே தெரிவித் திருக்கின்றன.
ஒருபக்கத்தில் பாஜக, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களைத் தாங்கள்தான் உருவாக்கினோம் என்று பீற்றிக்கொள்ளும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலம் தொடர்பாக இரட்டை நாக்குடன் பேசிக்கொண்டிருக்கிறது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படக்கூடாது என்று எவ்விதப் பிசிறுமின்றி கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போலல் லாமல், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் `ஒரே நாடு,. ஒரே மக்கள், ஒரே தேசம்’ என்று தொடர்ந்து பேசி வருகின்றன. எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் பொறுத்தவரை, கூட்டாட்சித் தத்துவம் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாடுகளை, மொழிகளை, பன்முகத்தன்மைகளை அங்கீகரிக்கும் ஒன்றாகப் பொருள்கொள்ளவில்லை. மாறாக, அவர்களைப் பொறுத்தவரை கூட் டாட்சித்தத்துவம் என்பது நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்பதும், அது மக்களின் பல்வகையான மொழி, இனம், பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதேயாகும். அனைத்து மாநில நிர்வாகங்களும் மத்திய அரசின் கருணையின்கீழ்தான் இயங்கிட வேண்டும் என்பதே அவர்கள் கோருவதாகும். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள மிகச்
சிறிய மாநிலங்களின், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின், அனுபவம் இதுதான். உதாரணமாக, தற்போது உத்தரப் பிரதேசத்தின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒரே குரலில் ஒரு நிலைப் பாட்டை மேற்கொள்கையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு அரசாங்கமும் உதாசீனம் செய்திட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், இதே மாநிலம் நான்கு அல்லது பல துண்டுகளாக உடையுமானால், ஒவ்வொன்றும் தன் வல்லமையை இழந்து, மத்திய அரசின் கருணை யின் கீழ் இருக்க வேண்டிய நிலை உருவாகி விடும், இல்லையா?
இதேபோன்றுதான் `குஜராத் மாடல்’ வளர்ச்சி என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் ஆகும். திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள பல்வேறு விவரங்கள் அது நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு வரவாக இருந்தாலும் சரி, குஜராத் ஒடிசா, சட்டீஊகர் போன்று தொழில்துறையில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கும் பின்னால்தான் குஜராத் இருக் கிறது என்று தக்க ஆதாரங்களுடன் மெய்ப் பித்திருக்கிறது. தனி நபர் வருமானத்திலும், நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுக்கு மத்தியில் அது ஆறாவதாக இருக்கிறது. வறுமை மட்டத்தில் ஐந்தாவதாகவும், நீண்ட காலம் உயிர் வாழ்வோர் நிலையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மனித வள வளர்ச்சி அட்டவணையிலும்கூட அது நாட்டிலுள்ள பெரிய
மாநிலங்களின் வரிசையில் பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அட்டவணையில் அது ஆறாவது இடத்தை வகிக்கிறது. குஜராத் மாநிலத்தில் வாழும் குழந்தைகளில் 80 சதவீதத்தினரும், பெண்களில் 55 சதவீதத்தினரும் ரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் அதன் `வளர்ச்சி மாடல்’ ஆகும். எதார்த்தநிலை இவ்வாறிருந்த போதிலும், `குஜராத் வளர்ச் சிக் கதையை’ இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அளந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரவன் ஏட்டின் இந்துத்துவா பயங்கர வாதத் தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஆசீமானாந்த் குறித்த சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையானது இந்துத்துவா பயங்கரவாத வலைப் பின்னலை தோலுரித்துக் காட்டுகிறது. 2007 பிப்ரவரியில் நடைபெற்ற சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது, 2007 மே மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள், 2007 அக்டோபர் ஆஜ்மீர் தர்காவில் நடை
பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் அனைத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான ஆசீமானாந்த் தற்போது காவல் துறையினரின் சிறைக்காவலில் இருக்கிறார். 2006 செப்டம்பர் மற்றும் 2008ல் மாலே கானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இவரின் பங்கு உண்டு என்று பெயரிருந்தபோதிலும், இன்னமும் இவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நபர் கூறுகிறார்: தான் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்ட அள வில் அனுமதி பெறப்பட்டது. அதாவது தற்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருக்கக் கூடிய மோகன் பகவத் வரை தெரியும் என்று கூறியிருக்கிறார். மோகன் பகவத், ஆசீமானந்திடம், “இது நிறைவேற்றப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நீங்கள் இதனை சங் அமைப்புடன் இணைத் திடக்கூடாது,’’ என்று சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிமானந்த் அளித்துள்ள ஒப்புதல்வாக்குமூலமானது, “ஆசீமானந்த் மேற்படி குற்றங்களைச் செய்கையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன்தான் நாட்டின் பல பகுதி களிலும் நடைபெற்ற சதித்திட்டங்கள் அனைத்திற்கும், அந்த இடங்களில் அணி திரண்டவர்களுக்கும் மற்றும் வெடி குண்டுகளை விதைத்தவர்களுக்கும் இடையே இணைப்புச் சங்கிலியாக இருந் திருக்கிறான். இவன் 2007 டிசம்பரில் மிகவும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.’’ என்கிற அளவிற்கு மிகவும் விபரமாக உள்ளன.
இந்துக்களுக்கு ஆயுதத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருவதற்கு நீண்ட வரலாறு உண்டு. வி.டி. சாவர்கர்தான், “அனைத்து அரசியலையும் இந்துமதமாக்கு. இந்துக்கள் அனைவரையும் ராணுவமய மாக்கு’’ என்ற கோஷத்தை முதலில் முன் மொழிந்தவர். இவற்றால் உத்வேகமடைந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரை வழிகாட்டியாகக் கொண்ட டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி, முசோலினி யைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். இந்தியா திரும்பியபின், டாக்டர் மூஞ்சே 1935ல் நாசிக்கில் மத்திய மிலிட்டரி கல்வி சொசைட்டியை நிறுவினார். இதுதான் 1937ல் நிறுவப்பட்டதும், இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகத் தற்போது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள போன்சாலா மிலிட்டரிப் பள்ளியின் முன்னோடியாகும்.
1939ல் கோல்வால்கர் நாஜி பாசிசத்தின் கீழ் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை வெகுவாகப் பாராட்டியதுடன், “இவரது நடவடிக்கைகள் இந்துஸ்தானில் உள்ள நம் அனைவருக்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆதாயம் அடைவதற்கும் நல்லதொரு படிப் பினையாகும்,’’ என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் மிகவும் காலம் கடந்து 1970இல்தான் அவர், “பொதுவாகக் கூறுமிடத்து, தீய சக்திகளால் (இந்த இடத்தில் இந்துக்கள் அல்லாத வர்கள் என்று வாசித்துக்கொள்க) நம்முடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களை வலுக்கட்டாயமாகத்தான் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள பொதுவான அனுபவமாகும்,’’ என்று கூறுகிறார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே, தன்னுடைய ஆட்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டால், அவர் களுடைய பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தங்களுக்கு அதனுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை ஆர்எஸ்எஸ் இயக்கம் அவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவரல்ல என்று எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் இக்கூற்றை நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே இன்றளவும் மறுத்து வருகிறார். இதுதொடர்பாக கோபால் கோட்சே ஊடகங்களுக்குத் தெரி
விக்கையில், “சகோதரர்களாகிய நாங்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாதுராம், தத்தாத்ரேயா, நான் மற்றும் கோவிந்த் அனைவருமே ஆர்எஸ்எஸ்-தான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் எங்கள் வீட் டில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்ததுதான் அதிகம். எங்களுக்கு அதுதான் குடும்பம் போன்று இருந்தது. நாதுராம் ஒரு அறிவுஜீவியாக செயல்பட்டான். அவன் தன்னுடைய வாக்கு மூலத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து விலகிவிட்டதாகக் குறிப்பிட் டிருக்கிறான். இதற்குக் காரணம், கோல்வால்கரும் ஆர்எஸ்எஸ்-உம் காந்தி கொலைக்குப்பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். ஆனால், அவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைவிட்டுச் சென்றிடவில்லை. (ப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994).
இந்தப் பின்னணியில் வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருப்பவரால் தூக்கி நிறுத்தப்படு வது தொடர்பாக வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப்பார்ப்பது அவசியமாகும். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தது இதே பட்டேல்தான். பட்டேல் அவர்களால் தயார் செய்யப்பட்ட 1948 பிப்ரவரி 4 தேதியிட்ட அரசு செய்தியானது, “சங் பரிவாரத்தின் ஆட் சேபனைக்குரிய மற்றும் தீங்குபயத்திடும் நட வடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றித் தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி யிருக்கிறது. இதில் கடைசியாகப் பலியான விலைமதிக்க முடியாத உயிர் காந்திஜியாகும்.’’ என்று கூறுகிறது.
மேலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தற்போது, 2002ஆம் ஆண்டில் கோத்ரா மதவெறிப் படுகொலைகள் சம்பவத்தின்போது குஜராத் மாநில அரசின் முதல்வராக இருந்து மோடி ஆற்றிய பங்களிப்புகளிலிருந்து அவரை விடுவித்து, நீதித்துறை மூலமாகவும் அவரை “சுத்தவாளி’’ (clean chit) என்று முத்திரை குத்த முயன்று கொண்டிருக்கிறது. 2012 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) இது தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணையை முடித்து தாக்கல் செய்த அறிக்கையை இதற்கு சாட்சியமாக அது முன்வைக்கிறது. இது உண்மைக்கு நேர் மாறான ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழு வானது, 2006 ஜூன் மாதத்தில் அகமதாபாத், குல்பர்கா சொசைட்டி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் முறையீட்டு அடிப்படையில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கும் அதே சமயத்தில், ஆயினும் மோடிக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்வதற்கு அவை போதுமானதல்ல என்றுதான் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. மேலும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர், குஜராத் முதல்வர் இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) (வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்), 153(ஆ)(தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குந்தக மாக பழிசுமத்துதல்) மற்றும் 166 (சட்டத்தின் உத்தரவினை பொது ஊழியர் மீறுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் விசாரணைக்கு உட் படுத்தப்பட வேண்டியவர் என்று தெளிவாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். 2002 முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக இறுதித் தீர்ப்பை பொறுத்தவரை, இன்னமும் ஏராளமான மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.எனவே எப்படிப்பார்த்தாலும் இவர் “சுத்த வாளி’’யாக முடியாது.
2002இல் நடந்ததையெல்லாம் மறந்துவிடுங்கள், மோடியின் தலைமையில் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்கிறார்கள். மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசுக்கும் நம் மக்களுக்கும் 2002 குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை நீதி மறுக்கப்பட்டு வருவது தொடர்கிறது. அப்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறிடவில்லை. இவ்வழக்குகள் அனைத்திலும் நீதி வழங்கப் படும்போது மட்டும்தான், நம் குடியரசு களங்கமில்லாததாகவும் வலுவானதாகவும் இருக்கும். இவ்வழக்குகளில் நீதி வழங்குவது மேலும் தாமதிக்கப்படுமானால் அது நீதி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.
2014ல் நாட்டிற்குத் தேவை என்னவெனில், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாற்றாக, நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கக்கூடியதும், அதன் மூலம் நம் குடியரசை வலுப்படுத்திடவும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்கக் கூடிய விதத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிடவும் கூடிய ஒரு வலுவான அரசியல் மாற்றை அளிப்பதுதான்.
- தமிழில்: ச.வீரமணி
நன்றி தேனீ
2/16/2014
| |
மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்
தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே
அமைச்சர் பசில் திட்டவட்டம்
| |
சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!
| |
தமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மகேந்திரா----சில நினைவுகள்
திரைப்பட மாணவர்கள் பல தரப்பட்ட குறும் படங்களைத் தஙகள் படிப்பு சம்மந்தமாக எடுப்பார்கள், நீங்கள், லண்டனில் படம் என்ன எடுத்தீர்கள்? ஏன்று கேட்டார். அந்தக்கால கட்டத்தில், 80ம் ஆண்டின் நடுப்பகுதியல், உலகில் நடக்கும் பல தரப்பட்ட விடுதலைப் போராட்டங்களும் முற்போக்குக் கொள்கை கொண்ட மாணவர்களின் படைப்புக்களில் பல தாக்கங்களையுண்டாக்கியிருந்தது. பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலிய அரசு எடுக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கெதிரான பிரச்சினைகள், நெல்ஸன் மண்டேலாவை விடுதலை செய் என்கிற போராட்டங்கள், சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம், மார்க்கிரட் தச்சரின் வெளிநாட்டு அரசியற் கொள்கைகள் என்பன ஒருசிலவாகும். அவற்றின் கருத்துக்கள் பிரதி பலிக்கப் பல தயாரிப்புக்களில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டதாகச் சொன்னேன்.
நம்பிக்கைகள்தான் வாழ்க்கையில் ஒளியைக்காட்டிக் கொண்டிருக்கிறது என்றார்
;
அவரின் படங்களைப் பற்றிக் கேட்டேன்.
மூன்றாம் பிறை படத்தை அண்மையில் பார்த்ததாகச் சொன்னேன்.
அதன் பின் அவர் ஒரு படத்தைப் போடடுக் காட்டினார் இது என் மனைவி நடித்தபடம் என்று சொன்னார்.
அவரின் மகன் திபை;பட சம்பந்தமாகப் படித்துக்கொண்டிருந்தான்.
இலங்கையில் பல மாற்றங்கள். அமைதி தருவார்கள் என்று நம்பிய இந்தியப் படை தமிழர் தங்கள் வாழ்நாளில் இலங்கைப் படையால் அடையாத பல கொடுமைகளைச் செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னேன்'. இலங்கையில் எப்போது அமைதி வரும் என்ற ஏக்கம் அவரிற் தெரிந்தது. அவர் பிறந்த மட்டக்களப்பு, அமிர்தகழிக் கிராமத்தைப் பார்க்காத, மீன்பாடும் தேனாட்டில் கால் பதித்து ஆசை தீர நடந்து திரிய முடியாத துயரை அவரின் பேச்சிற் கண்டேன்.
எனது சினிமாத்துறை பட்டத்தை வைத்துக்கொண்டு,; லண்டன் திரைப்படவுலகில் எனது சீவியத்தை அமைக்க முடியவில்லை என்று நான் துயர்பட்டபோது, சிறுபான்மையினப் பெண்ணான எனக்கு, லண்டனில் ஆளுமை கொண்ட வெள்ளையின மத்திய தரவர்க்கத்துடன் மோதிக்கொள்ள முடியாத பரிதாப நிலையை அவர் உணர்ந்தார்.
அத்துடன், திரைப்படம் சாராத துறையில் முதுகலைப்பட்டம் பெற்று ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்தது பற்றியும் எனது மகன்கள் உயர்படிப்புகள் படிப்பது பற்றியும், உண்மையான சகோரத்துவ பாசத்துடன் பாராட்டினார்.
அப்போது, அவர் பற்றிய கிசுகிசுப்புக்கள் பல சென்னையில் உலவின.
நான் ஒரு நாளும் அவை பற்றி அவரிடம் கேட்டது கிடையாது. பாலு ஒரு நல்ல மனிதன், அற்புதமான திரைப்படக் கலைஞர்களில் ஒருத்தர். தனது கமராவால் கவிதை படைக்கும் கவிஞன்; அவர். தென்னாட்டின் சத்யத்ரேய் அவர். நல்ல திரைப்படக்கலைஞர்களை அடையாளம் கண்டவர், அவர்களை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் உலகத் தமிழர்களின் அற்புத நடிக நாயகனான கமலகாசன், முதற்தரம் சிறந்த நடிகனுக்கான விருதைப்பெற வழிசெய்தவர். வர்த்தக உணர்வில் கவர்ச்சிப் பாத்திரங்களைப் பயன்படுத்தாமல், தமிழ்ப்படத்திற்குத் தமிழ்நாட்டுக்; கறுப்பு நாயகிகளைத் தேடியவர்.
அவரின் எதிர்கால வாரிசுகளாக எத்தனையோ இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியவர், இவைகளுக்கு மேல் அவரைப்பற்றிய தனிப்பட்ட விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஒரு நாளும் நினைத்தது கிடையாது.
அதன் பின், அடுத்து வருடம்;,1998ல், தமிழ்க்கடவுள் முருகன் பற்றிய ஒரு மகாநாட்டுக்கு சென்னை போயிருந்துபோது,; பாலு வீட்டுக் கதவைத் தட்டியபோது அகிலா அன்புடன் வரவேற்றார். என்னைப் பார்த்து முறுக்குடன் குலைத்து மிரட்டிய அவர்களின் நாய் சுகமில்லாமல் சாக்குக் கட்டிலில படுத்திருந்தது.
பாலு, படப்படிப்பில மிகவும் பிசியாகவிருந்தார். படத் தெருவில் அவர் படம் எடுக்கும்போது மணிக்கணக்காக அவருடன்சேர்ந்து கொண்டு, சென்னைத் தெருக்களில் திரிந்தது ஒரு நல்ல ஞாபகம். பல தடவைகள் எங்கள் சந்திப்பு அவரின் எடிட்டிங் றூமில் நடக்கும்.
இலங்கை பெற்றெடுத்த அந்த அற்புதக்கலைஞனை லண்டன் திரைப்படவுலகத்திறகுத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலை அடிக்கடி சொல்வேன். தான் இன்னும் இலங்கைக்கு மட்டுமல்ல வெளியில் எந்த இடத்திற்கும் போகவில்லை;. அவரின் நிலை வெளியில் பிரயாணம் செய்யத் தடையாயிருக்கிறது என்பது எனக்கு வேதனையைத் தந்தது.
அந்தச் சந்திப்பின் பின்; கடைசியாக பாலுவைக் கண்டது 2006ம் ஆண்டாகும். திரைப்படத்துறைபற்றிய ஒரு வோர்க்ஷொப்பைத் தொடங்கும் பணியில் இருந்தார். அவரின் கலைத்தாகம் அளப்பரியது. தனித்துவமானது, பன்முகப் பரிமாணங்களைத் தாங்கியது. பூனேயில் தனது திபை;படப் பட்டப்படிப்பை முடித்தகாலத்திலிருந்து அவர் எடுத்த படைப்புக்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிருக்கின்றன. கிட்டத்தட்ட 22 படங்கள் எடுத்திருக்கிறார். நான் அத்தனை படங்களையும் பார்த்தது கிடையாது. ஆனால் அவை ஓவ்வொன்றும் ஒவ்வொரு வண்ண ஓவியங்கள் என்பதை மறுக்க முடியாது..
எந்தக்கலைஞனும், தங்களின் சுய நினைவுகள், காதல் பற்றிய நுணுக்கமான உணர்வுகள், ஆத்மீகத் தேடல்கள், அரசியல் உந்துதல்கள் என்பதைத் தங்களின் படைப்புக்களில் தெரிந்தோ தெரியாமலோ. விரும்பியோ விரும்பாமலோ பதிவு செய்வது தவிர்க்கமுடியாது. அதன்பிரதிபலிப்பின் ஒரு உருவம்;தான் மூன்றாம்பிறை. அவருக்கும் ஷோபாவுக்கும் இருந்த உறவு, முறிந்த சோகத்தின் பிரதிபலிப்புத்தான் அந்தப்படம். அதை அவர், நீண்டகாலத்தின்பின் ஒரு நேர்காணலில்; மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.
அவரின் படங்கள் முழுக்க முழுக்க கலைப்படைப்புக்கள் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் இந்தியத் திரைப்படவுலகில் அப்படிப்படங்கள் எடுக்க எதுவித வசதியோ ஊக்குவிப்போ கிடையாது. வர்த்தக உள்ளீடல், பங்களிப்புக்கள் இல்லாமல் ஒரு படம் எடுக்கும் சந்தர்ப்பம அங்கு பெரிதாகக் கிடையாது. அப்படி எடுக்கப்பட்ட படங்களைப் பெரும்பாலும் வெற்றியுடன் வெளியிடவும் முடியாது. ஆனாலும், தன்னால் முடிந்தமட்டும் தனித்துவம் பேணும் நல்ல பல படங்களை பால மகேந்திரா மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்
அவரின் 'சந்தியா ராகம்' உலகப் பெயர் பெற்ற வட இந்திய இயக்குனரான சத்தியத்ரேயின் 'பதர் பாஞசாலி'யை ஞாபகப் படுத்துகிறது. கதையின் கரு, வாழ்க்கையின் அந்திம காலத்தில் மற்றவர்களின் தயவுக்கும் உதவிக்கும் தவிக்கும் ஒரு முதிய தலைமுறையின் ஏக்கத்தைப் பிரதிபலித்து,அந்தக் கதையைக் கவிதையாக்கியிருக்கிறது அவரது கமராவின கைவண்ணம்.
ஒவ்வொரு கலைஞனும், தாங்கள் எடுத்த காரியத்தை நோமையாக வெளிப்படுத்தும்போது அந்தப் படைப்பு சாகாவரம் பெறுகிறது. அப்படியான கலைஞர்களில் பாலு மகேந்திராவும் ஒருத்தர். அவரைப் பெற்றெடுத்த அமிர்தகழிக்கிராமமும், தத்தெடுத்த தமிழகத் திரைப்பட உலகும்,, அவரால் வளர்க்கப்பட்ட பல திறமையான இளம் இயக்குனர்களும், அவரின் படங்களை ரசித்து மகிழ்ந்த பல கோடித் தமிழர்களும், அவரின் இரு மனைவிகளும், அன்பு மகனும் அவரின் பிரிவால் படும் துயருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களைச் செலுத்துவோம்.