சுகு-ஸ்ரீதரன்
இன்று தமிழ் -தமிழன்- உலகத்தமிழர் ஒற்றுமை -தனிக்குணம் -பழமை உலகில் அனைத்து மொழிகளிலும் தொன்மையானது என்றெல்லாம் சொல்லப்படுக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விதிவிலக்குகளை விடுவோம். ஈ.வே.ரா அவர்கள் தென்னிந்தியா- தமிழகத்தில் தீண்டாமை பெண் அடிமைத்தனம,; சமயம் பற்றிய அறக் கோட்பாடுகளை முன்வைத்துச் செயற்பட்டார் .
ஆனால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு தீவிர மறுமலர்ச்சி சீhதிருத்த இயக்கத்தை அவர் நடாத்தினார் ஆனால் அதன் பின்புலத்திலேயே தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளும் உருவாயின. இவற்றைவிட வேறுபல இந்தப்பாரம்பரியத்தில் வந்த இயக்கங்கள் இருக்கின்றன.
பெரியாரின் கொள்கைகளை நடைமுறைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் நடைமுறைகள் பரவலாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து சாதியம் ,பெண்ணடிமைத்தனம் மதச்சீர்திருத்தங்கள் பற்றிய அக்கறைகளை நாம் தவிர்த்து விட முடியாது.
கலைஞரிடம் இன்று உலகில் வாழுழ் தலைவர்களில் தனக்கு பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் அவர் பிடலைத்தான் சொல்லுவார். பெரியாருக்கு ஸ்டாலினைப் பிடிக்கும். இன்று தமிழ் நாட்டில் பல ஸ்டாலின் பெயர்கள் பெரியாரால் சூட்டப்பட்டவையே. இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல் என்று வரும்போது இந்த பிரபல திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள்.
அமெரிக்கா கடுமையான பொருளாதாரத்தடை விதித்த நாட்களில் கியூபாவிற்கு உணவுப்பொருள் சேர்த்தனுப்பும் இந்திய மார்க்சிஸ்ட கட்சியின் முயற்சிக்கு மக்கள் பல்வேறு கட்சிகள் கலைஞர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். மண்டெல் கமிசன் பரிந்துரைகள் ஏகோபித்த முறையில் தமிழக அரசியல் கட்சிகளால் வரவேற்க்கப்பட்டன. பின் தங்கிய சமூகங்களுக்கான இட ஒதுக்கீடுகள் பற்றிய அக்கறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான அத்து மீறல்களை பொலிஸ்நிலையங்களில் முறையிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்காக பெண்களுக்கோ சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்- தலித்துக்களுக்கோ பிரச்சனைகள் இல்லையென்றில்லை.
ஆனால் தமிழகத்தில் இன்று இடதுசாரி இயக்கம் பெரியாரின் இயக்கம் அம்பேத்கர் இயக்கம் தோழர் ஜீவா காமராஜர் பாரம்பரியத்தின் செல்வாக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கண்ணதாசனின் பாடல்களிலும் எம்ஜிஆர்- சிவாஜி படங்களிலும் கலைஞரின் வசனங்களிலும் சீர்திருத்த-பகுத்தறிவுக்கருத்துக்கள் இழையோடும்.
ஆனால் யாழ்மைய அரசியல் பொதுவாக வலதுசாரி வகைப்பட்டது. விதிவிலக்குகள் இருக்கின்றன. அதற்கு பெரியாரோ ,அம்பேத்கரோ ,காமராஜரோ, ஜீவாவோ உவப்பானவர்கள் அல்ல. தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுபவர்கள் சமகால சமூக பொருளாதார மாற்றங்கள் அதனூடாக எழுந்த இந்திய தமிழக சமூக விழுமியங்களுடன் ஈழத்தமிழர் அரசியல் நெருக்கமானதல்ல. அப்படிப்பார்த்தால் இலங்கையின் இடதுசாரி அரசியலும் ஈழ முற்போக்கு அரசியலும் மாத்திரமே தமிழகத்திற்கு நெருக்கமானவை.
வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றையும் செய்து தருவார்கள். மற்றவர்கள் தம்மை விட தரம்தாழ்ந்தவர்கள் என்ற மன நிலையே பிரதானமாக வடக்கு யாழ்ப்பாண மைய அரசியலின் சாரம்சமாகும். அது பொதுவாக தமிழக அறம் சார் இலக்கியவாதிகளுடயோ அல்லது சமூகப்பிரக்ஞைகொண்ட எழுத்தாளர்களுடனோ தொடர்புபட்டதில்லை. விதி விலக்குகள் இருக்கின்றன. ஜனரஞ்சக சஞ்சிகைகள் வர்த்தக ஜனரஞ்சக சினிமா போன்ற ஊடகங்கள் அதற்கு விதிவிலக்கு.
தமிழகத்தில் அக்கறைக்குரிய அறங்கள் எல்லாம் ஈழத்தமிழர் ஆதிக்க அரசியலில் அக்கறைக்குரியவை அல்ல. அதே மாதிரியான பிரச்சனைகள் இங்கும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய அக்கறைகள் இங்கு முற்போக்காளர்களுக்கு மாத்திரம் உரியவை. இது முதலில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஈழத்தமிழர் ஆதிக்க அரசியல் தனது சொந்த நலன்களுக்காகவே 'வெறும்' மொழி- பொருளாதார நலன்களையும் வைத்து மாத்திரம் கொண்டு தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுகிறது. புலம்பெயர் வியாபாரமும் நுகர்வும் பெருமளவு தமிழகம் சார்ந்தது.
ஆனால் யாழ்மையவாதம் இந்தியர்களை- தென்னிந்தியத் தமிழர்களை விட தாம் ஒரு படி உயர்ந்தவர்களாகவே நோக்குவது. வெள்ளைக்காரர்கள் தான் தமக்கு சமதையானவர்கள் என்ற ஆதிக்கத்திமிர் மனோநிலையைக் கொண்டது. ஒருவித அடிமை மன நிலையும் கூட. மற்றப்படி சிங்களவர்களோ, ஆபிரிக்கர்களோ இதர மக்கள் குழுவினரோ தமக்கு நிகரானவர்கள் இல்லை என்ற இறுமாப்பும் இருக்கிறது. மேற்போனால் இஸ்ரேல்காரர்களும் தாமும் ஒன்று என்ற மனோநிலையும் இருக்கிறது.
இதனை ஒரு தொற்று வியாதியாக இப்போது சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கும் பரப்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் சில அரசியல் பிரிவினருக்கு இது தெரியாதது. விளங்கிக்கொள்ளமுடியாததென்றும் இல்லை. ஆனால் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கும் நாட்டின் தேர்தல் அரசியலுக்கும் பயன்படுகிறதென்றால் மெருகேற்றி பயன் படுத்துவார்கள்.
ஆனால் ஈழத்தமிழர் பற்றிய அறிவிலும் பிரச்சனை இருக்கிறது.
கிழக்கு-மலையகத் தமிழர் ,முஸ்லீம் மக்கள் ,சிங்களவர்கள் பற்றிய அறிவு அல்லது இலங்கை சமூகங்களின் வரலாறு பற்றிய அறிவும் குறைவாகவே காணப்படுகிறது. ஈழப் போராட்ட வரலாறு ஜனநாயக மறுப்பு இனப்பிரச்சனையின் தாற்பரியம் பற்றிய மேம்போக்கான ஒரு திரிந்த அறிவே காணப்படுகிறது.
சிங்களவர்கள் என்றால் உலகில் மிக மோசமான மனிதர்கள் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களுக்குமிடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை. பௌத்த சிங்கள பேரினவாதம் போல் யாழ்மையவாதம் எவ்வளவு மோசமான நச்சு அரசியல் என்பதும் தெரியாது. அது தமிழகம் மீதும் வெறுப்பை உமிழ்வது அருவருப்பது என்பதும் புரியாது.
உதாரணத்திற்கு தமிழக மக்களுக்கு ஈழத்தமிழர் நிலை ஏற்பட்டு இங்கு நிலைமை சுமுகமாக இருந்து அங்கிருந்து மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பாருங்கள். இங்கு சுயபச்சாத்தாபம் மாத்திரம் தான் இருக்கிறது.
எங்களைவிட உலகில் எவரும் கஸ்டப்படவில்லை என்ற கபடத்தனம் தான் செல்வாக்குச் செலுத்துகிறது. புத்திசாலிகள். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் சிறந்ததொருசௌகரியமான புலம் பெயர்வாழ்வை அமைத்துள்ளார்கள். ஆனால் இன்னுமெரு பிரிவினர் 30 ஆண்டு போர் அனுபவங்ளை முள்ளிவாய்கால்வரை பெற்று செத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த இழப்புக்களும் மரணங்களும் தான் வட அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கையை ஸ்தாபித்தது.
அதனை இயக்கும் சத்தியாக இருந்தது யாழ்மையவாதமே.
இன்று யாழ்மையவாத சர்வதேச அரசியல் இங்கு ஈழத்தமிழர்களுக்கு நல்வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்கென்று கருதினால் அது அடி முட்டாள்தனமானதாகும்
அது பிரக்ஞை பூர்வமாகவே ஐரோப்பாவிலும் வட அமெரக்காவிலும் தனது சௌகரியமான இருப்புக்காக உள்ள10ர் தமிழர்களின் பிரச்சனைகளை மூலதனமாக்கியருக்கிறது. நாடு கடந்த தமிழீழம் என்பதும் அதுதான். இங்கு பிரச்சனை தீராமல் இருப்பதையே யாழ்மையவாதிகள் விரும்புகிறார்கள்.
இப்போது பிரச்சனை எல்லாம் இங்கு வாழ்க்கையை கட்டியமைக்கமுடியுமா என்பதே. இலங்கையின் ஜே.ஆர் - மகிந்த வரை யாழ்ப்பாண மன நிலையின் குணம் குறிகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் வடக்கு- கிழக்கு வெறிச்சோடி விடும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.
அந்த இடைவெளியில் சிங்களவர்களை குடியேற்றத்தையும், இராணுவ மயமாக்கலையும் ,கலாச்சார ஆக்கிரமிப்பு கெடுபிடிகளையும் அதிகரித்துச் செல்வார்கள். 1980களில் ஆட்கள் வெளியேறிச்செல்வதை ஊக்குவித்தது போலவே யுத்தம் முடிந்த கையோடு சரமாரியாக ஆட்கள் வெளியேறுவதை இலங்கை அரசு ஊக்குவித்தது. அண்மைய அவுஸ்திரேலிய கடல் பயணங்களில் எத்தனை பேர் கடலில் மாண்டார்கள் என்று தெரியாது. மனிதர்கள் இவ்வாறு வெளியேறுவது தேசிய எல்லைகள் என்று சொல்லப்படுவதை கடப்பது பிரிச்சனை என்று கூறவரவில்லை.
மனிதகுலவரலாறு ழுமுவதும் இது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தின் இருப்பை நிராகரிக்கும் அரசின் போக்கும் அதனை மானசீகமாக ஏற்றுக் கொண்டு பகிரங்கத்தில் பாசாங்காக வார்த்தைகளை உதிர்க்கும் போலித்தனமும் தான் பிரச்சனை. இந்த நிலத்தில் கௌரவமாக மரியாதையுடன் வாழ்வதற்கு எத்தனை பேருக்கு விருப்பம் என்பதுதான் முக்கிய கேள்வி.
சுகு-ஸ்ரீதரன் நன்றி தேனீ