காணாமல் போனவர்கள் பற்றி மனுக்கொடுக்க அலையும் அனந்தியிடம் புலிகளால் வவுனியாவிலிருந்து வன்னிக்குக் கடத்திச் செல்லப்பட்ட பாரூக் எங்கே என்று கேட்டால் அனந்தி பதில் சொல்வாரா? 2009 வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்த அனந்தி புலிகள் அழிக்கப்பட்டபின் இப்போது மாகணசபை உறுப்பினராகியுள்ளார். அவர் வன்னி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்கள் இதுவரை எங்கேயென்று யாருக்கும் தெரியாது.
புளொட் உறுப்பினரான பாரூக் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி கணேசலிங்கம் புலிகளால் வவுனியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். 2009ம் ஆண்டு மேமாதம் யுத்தம் முடிவுற்றபின் பாரூக் பற்றிய தகவல்கள் இல்லை.பாரூக்கும் அவரது மனைவி சாந்தாவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் குடியேறி அமைதியாக வாழ்வதாக புலிகளின் ஊடகங்கள் தெரிவித்தன.பாரூக் புலிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் தங்கள் சிறைச்சாலைகளில் வைத்திருந்தவர்களைக் கொன்று தடயங்களை அழித்துவிட்டதாக இராணூவத்தினரிடம் சரணடைந்த புலிகள் கூறியுள்ளனர்.