இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதனையடுத்தே இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன
இதேவேளை, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போது கடமையாற்றும் பிரசாத் காரியவசம் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஜாலியவின் நியமனம் குறித்த அறிவித்தலை கனேடிய அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்த கடந்த வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற கருணாதிலக அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.