பலஸ்தீன் அரசின் அதியுயர் விருதான பலஸ்தீனின் நட்சத்திரம் விருதினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன அரசாங்கம் நேற்று வழங்கி கெளரவித்தது.
இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்குமிடை யிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன் மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤க்கும் ஸ்ரீலங்கா மித்ர விபூஷன விருதினை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதியுடன் முதற் பெண்மணி ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவும் ஜோர்தான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து சென்றுள்ள இலங்கை தூதுக் குழுவி னரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், வெளிவிவகார அமை ச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, பாராளு மன்ற உறுப்பினர்கள் ரொஷான் ரணசிங்க, திருமதி கமலா ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் காமினி ராஜபக்ஷ ஆகியோர் இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.