1/06/2014

| |

க.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தில் கிழக்கு மாகாணம்

அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரம் 2013 பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் நிலைக்கு அடைந்துள்ளமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் இதற் காக பாடுபட்ட அனை வரையும் பாராட்டியுள்ளார்.
இம்முடிவை அடைந்து கொள்வதற்காக உழைத்த மாகாணக் கல்விப் பணிப் பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையிலான கல்விப் பணிப்பாளர்களுக்கு தாம் விசேட நன்றியறிதலை தெரிவிப்பதாகவும் அவர் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார். இம்முறை வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முதலாம் இடத்தினை சப்ரகமுவ மாகாணமும், மூன்றாம் இடத்தினை கிழக்கு மாகாணமும் தேசிய அளவில் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் ஏழாம் இடம் அல்லது எட்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கிழக்கு மாகாணம் இம்முறை மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமையானது பெரும் சாதனையாகும். ஏனெனில் வளம் குறைந்த கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்த ஏனை மாகாணங்களை பின்தள்ளியுள்ளது. எனது முயற்சிக்கு ஒத்துழைத்த சகல பாடசாலை அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் நன்றிக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார்.