1/09/2014

| |

சேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின் சிவாஜிலிங்கம் வெள்ளிமலை


வரலாறு தெரியாத முட்டாளுகளுக்கெல்லாம் வாக்களித்த மக்களை சொல்லோனும் 

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையளராக தமிழர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால’ வெளியிடப்பட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
‘முற்பட்ட கால வரலாறு தொடக்கம் இன்று வரை முஸ்லிம் - தமிழ் மக்களின் உறவு சரிவர தெரியாமல் இருப்பதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்கள்மீது வைத்திருக்கும் கரிசனையும் பேரன்பினையும் கபட நாடகம் என உதாசீனம் செய்கின்றனர்.
இந்த நாட்டில் பிரித்தானியரின் ஆட்சி காலத்திலே கண்டியில் சிங்கள - முஸ்லிம் கலவரம் எழுந்தபோது அந்த காலப் பகுதியில் தமிழ் தலைவர்களாக இருந்த சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்தனர்.