1/04/2014

| |

மேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை அடுத்தவாரம் கலைத்து அவற்றுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இரு மாகாண சபைக ளுக்குமான தேர்தல் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் இரு மாகாணசபைகளும் கலைக்கப்படும்.
தெற்கு மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. இம்மாகாணங்களில் நடந்துள்ள அபிவிருத்திகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தன என்றார்.