மனித உரிமையாளர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள்,ஜனநாயகவிரும்பிகள் மீது துரோகபட்டம் சாட்டும் புலிகளின் பாரம்பரியம் "தினக்கதிர்" இணையத்தளம் மூலம் தொடர்கிறது. பாரிசில் இடம்பெற்றதாக கூறப்படும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக லண்டன் இராகவன்,நிர்மலா,சுவிஸ் புதுமைலோலன்,பத்மபிரபா,யோகராஜா போன்ற தோழர்களின் படங்கள் பிரசுரிக்கபட்டுள்ளன.நண்பர்களே இது என்ன?எப்படி இந்த சேறடிப்புகளை எதிர்கொள்ளபோகிறோம்? எதுவித ஆதாரமுமின்றி பொய் செய்திகளை வெளியிடும் இதுபோன்ற இணையதளங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாதா?
தினகதிர் வெளியிட்டுள்ள செய்தி இதோ
ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோருக்கு பணகுவியல்
ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் வாழும் சிங்களவர்களையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் தமிழர்கள் சிலரையும் இணைத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அலுவலகம் முன்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா உட்படலான பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை பிரான்ஸின் தலைநகரான பரிஸில் இடம்பெற்றுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் சில தமிழர்களும் கலந்து கொண்டனர். பெருந்தொகையான பணம் தரப்படும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டி வருமாறும் இந்த கூட்ட ஏற்பாட்டர்கள் அங்கு கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்துள்ளனர்.