அமெரிக்க தூதரக வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் தட
வீதி ஒழுங்குகளை மீறும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
இந்தியாவுக்கும், அமெரிக்கா வுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவுகளில் ஏற்பட்டி ருக்கும் முறுகல் நிலை மேலும் வலுவடைந்துள் ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத்தூதுவர் தேவயானியின் கைதுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு அங்கமாக இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி 16ஆம் திகதி முதல் புதுடில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமென்று இந்தியா அறிவித்துள்ளது. அமெரிக்க சமூக ஒத்துழைப்பு அமைப்பின் ஊடாக உணவகம், வீடியோக்கள், நீச்சல் சேவை, விளையாட்டு சேவை, உடற்பயிற்சி நிலையம் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றை நிறுத்துமாறு இந்தியா தற்பொழுது அறிவித்துள்ளது. வ்வாறான வர்த்தக செயற்பாடுகளுக்காக இராஜதந்திரிகள் அல்லாத அமெரிக்கப் பிரஜைகளுக்கு இந்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட வரிச்சலு கையை மீளச்செலுத்துமாறும் இந்தியா அறிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், வீதி ஒழுங்கு விதிகளை மீறும் அமெரிக்கத் தூதரக வாகனங்களுக்கு எதிராகத் தண்டனைகளை வழங்கவும் இந்தியா தீர்மானித்துள்ளது.