1/02/2014

| |

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். 

1974ம் ஆண்டு கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த இவருக்கு, இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் இலங்கையில் வட கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்ட அனுபவம் உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார்.

எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னர் லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.


டிசம்பர் 12ம் திகதி தல்பீர்சிங் சுகக்கை இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக நியமிக்கப்போவதாக இந்திய இராணுவம் அறிவித்தது.