கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை முன்னெடுப்பதற்காக முதற்கட்டமாக சுமார் 30 திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தெரிவித்தார்.
இத்திட்டங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட் டாளர்களுக்கு முன்மொழிவதற்காக ‘கிழக்கில் முதலீடு செய்யுங்கள்’ என்னும் தொனிப் பொருளில் சர்வதேச மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கென சர்வதேச மட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடொன்று நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 300 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவரென எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹாபிஸ் நiர் அஹமட் தெரிவித்தார்.
பணவசதி படைத்தவர்கள் மட்டுமன்றி சிறந்த தொழில்நுட்ப அறிவு குறித்த துறையில் தேர்ச்சி சந்தைப்படுத்தலில் அனுபவமிக்க நிலையாக திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய முதலீட்டாளர்களிடமே கிழக்கு மாகாணத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஒப்படைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
விவசாயம், கால்நடை, மீன்பிடி, மீன் வளர்ப்பு, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளிலேயே முதலீடுகளுக்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாகா ணம் தென்னாசியாவின் மிகச் சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் கொண்ட கேந்திர நிலையமாக விளங்குகிறது. இதன் வள ங்கள் குறித்து உள்நாட்டவர்கள் மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்க ளுக்கும் இது குறித்து அறியத்தரும் வகையிலேயே இந்த சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கிழக்கில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட் டுள்ளது. காணி, நிலத்தின் தன்மை, உற்பத்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஏற்கனவே கணிப்பிடப்பட்டு முதலீட்டா ளர்களின் வசதிகருதி கையேடுகளாக வழங்கப்படும். அவர்களுக்கான உதவிகளை வழங்க எமது அமைச்சுக்கள் முன்வரு வதனால் முதலீட்டாளர்கள் தயக்கமின்றி இங்கு முதலீடுகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கூறினார்.
50 மில்லியன் ரூபா முதல் 5 ஆயிரம் மில்லியன் ரூபா வரையில் முன்மொழிவுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. தற்போதே இந்தியா, மலேசியா, அமெரிக்கா, பிரிட்டிஷ், பாக்கிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதேவேளை உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 100 முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்தே இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாட்டிற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, இலங்கை சுற்றுலா அதிகார சபை இலங்கை மாநாட்டு மன்றம், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனம் ஆகியனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.
கிழக்கு மாகாணத்தில் அரிதாக பயன்படுத்தப்படுகின்ற விவசாய நிலம் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேயர் உள்ளது. மீன்பிடித்துறை, கால்நடை அபிவிருத்தி, பாற்பண்ணை அபிவிருத்தி போன்ற ஏனைய பல துறைகளிலும் முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. நாட் டின் கரையோர பகுதியில் 30 சதவீதமான பிரதேசம் இந்த மாகாணத்திலேயே உள்ள போதிலும் மூன்று தசாப்த கால மாக நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் காரணமாக மீன்பிடித்துறை மிக பின்தங்கிய நிலையில் உள்ளது.
வருடாந்தம் 36 பில்லியன் ரூபா பெறுமதியான பால் உற்பத்திகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் கால்நடை வளர்ப்பு, பாற்பண்ணை அபிவிருத்தி பால் உற்பத்தி போன்ற துறைகளிலும் அரிய பல வாய்ப்புகள் முதலீட்டாளர்களுக்காக காத்திருக்கிறதெனவும் அமைச்சர் கூறினார்.