1/31/2014

| |

யாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன: அரச அதிபர்

'யாழ். மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக உதயபெரேரா பதவி ஏற்ற பின்னர் 200 சிறிய இராணுவ முகாம்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பு படையினரின் பாவனையில் இருந்த வீடுகள் மற்றும் காணிகளும்  இராணுவத்தினரால் தற்போது கையளிக்கப்பட்டு வருகின்றன' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (29) தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயபெரேராவுடன் மீள்குடியேற்றம் தொடர்பில் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சிலர் புதன்கிழமை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
வலி. வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள 24 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகளின்றி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உதயபெரேராவை வலியுறுத்தவுள்ளேன்' என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.