1/12/2014

| |

மட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கான நியமனங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக சுகாதார அமைச்சிடம் பிரதியமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, மட்டு. போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் முருகானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பிரதியமைச்சர் முரளிதரனால், 20 பேருக்கான நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சின் செயலாளர்கள், வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.