12/12/2013

| |

பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவரை தூக்கிலிடுவது கடைசி தறுவாயில் நிறுத்தம்

பங்களாதேஷில் மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்ட இஸ்லாமியவாதத் தலை வரை தூக்கிலிட ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த தண்டனையை பங்களா தேஷ் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா மீது யுத்த நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை நிறைவேற்றும்படி அந்த நீதிமன்றம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது. இதன்படி அவரை செவ்வாய் இரவு தூக்கிலிட சிறை நிர்வாகம் திட்டமிட்டது.
ஆனால் அப்துல் காதரின் உறவினர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன் முறையீட்டை அடுத்து அவரது தண்டனை கடைசித் தறுவாயில் ஒத்திவைக் கப்பட்டது.
1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றமே அப்துல் காதர் முல்லாவுக்கு மரண தண்டனை விதித்தது. பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அந்நாட்டின் இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டதை இலக்குவைத்து அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது யுத்த நீதிமன்றம் குற்றம் சுமத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.