12/09/2013

| |

கிரானில் வியாபாரக் கட்டிடத் தொகுதி கையளிப்பு







(மட்டு செய்தியாளர்)

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டவேலைத்திட்டத்தின் கீழ்  நிர்மானிக்கப்பட்ட வியாபார கடை கட்டிட தொகுதியினை கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆலய நிர்வாக சபையினரிடம் இதற்க்கான உத்தியோக பூர்வமான சான்றிதழை வழங்கி வைத்தார்.
இதன்போது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர்  மா.குன்றக்குமரன் ஆகியோர்களும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
52.53மில்லியன்கள் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இக்கட்டிடமானது இரு தளங்களை கொண்ட 18 கடைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.