அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள், மஹிந்த ராஜபக்ச அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் இம்மாவட்டத்தினை மேலும் வளமான மாவட்டமாக மாற்றமுயுடிம் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள நவகிரி நகர் கிராமத்திற்ககு உத்தியோகபூர்வமாக மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டிலே பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. எதிர்க் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பல வழிகழிலும் சிறந்த தலைமைத்துவமின்றி பலமிழந்து நிற்கின்றது. இதனால் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில் இன்று காணப்படுகின்றது.
எனவே அனைத்து சிங்கள பெறும்பான்மையான மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பின் அணிதிரண்டு நிற்பதனால் அடுத்த முறையும் அவர் ஜனாதிபதியாவது உறுதியாகிவிட்டது. அதில் மாற்றுக்கருதுக்கே இடமில்லை.
எனவே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் சார்பாகவோ அல்லது முஸ்லிம் மக்கள் சார்பாகவோ எவரும் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. என்றாலும் ஜனாதிபதியினை நிர்ணயிக்கின்றவர்களாக நாங்கள் காணப்படுகின்றோம்.
எனவேதான் தற்போதைய எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக்குவதன் மூலம் எமது உரிமைகளைப் பெற்று வாழ்க்கையையும் வளமாக்கிக் கொள்ளலாம்.
நமது மாவட்டம் மிகவும் வளமான மாவட்டம். ஆனால் இம்மாவட்டத்தில் வறுமையான மக்கள் வாழ்கின்ற மாவட்டமாகக காணப்படுகின்றது. இதற்கான வேலைத் திடங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து எவற்றினையும் சாதிக்கமுடியாது ஒரு அமைப்பில் இருக்கின்ற போதுதான் இவற்றினை மேற்கொள்ள வேண்டும்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவராக இருக்கின்ற காரணத்தினால்தான் அதிகளவான நிதிகளைக் கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிகின்றது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து எதிர்க் கட்சிக்கு அனுப்பியதன் மூலம் எவற்றினைப் மக்களாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். எனவேதான் எதிர்வரும் காலத்தில் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.