டில்லியில் டிசம்பர் 18ம் தேதிக்குள் புதிய அரசு ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ., ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி பிடிவாதமாக இருப்பதால், டில்லியில் ஜனாதிபதி ஆட்சி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மொத்தம் 70 இடங்கள் கொண்ட டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. பா.ஜ., 32 இடங்களிலும், ஆம் ஆத்மி 28 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் 8 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிக இடங்கள் பெற்றுள்ள பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டும் ஆட்சி அமைக்க மறுத்து, எதிர்கட்சியாக அமர முடிவு செய்துள்ளன. குழப்படியான இந்த சூழ்நிலையில், டில்லி நிலைமை குறித்து அறிக்கை அனுப்பும்படி துணைநிலைஆளுனரை ஜனாதிபதி கேட்டுள்ளார்.
இதையடுத்து, அதிகபட்சமாக, 32 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.,வை ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வருமாறு டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜூக் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதடியில் இருக்கும் போது எடுத்த முடிவின் அடிப்படையில், டில்லியில் முதலில் பா.ஜ.,வின் ஹர்ஷவர்தன் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் எனவும் ஆளுனர் தெரிவித்துள்ளார். கவர்னரின் அழைப்பை பா.ஜ., ஏற்க மறுக்கும்பட்சத்தில், அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பார். ஆம் ஆத்மி கட்சியும் கவர்னரின் கோரிக்கையை ஏற்க மறுத்தால், டில்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்வார். டிசம்பர் 18ம் தேதிக்குள் டில்லியில் புதிய அரசு ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், பா.ஜ., மற்றம் ஆம் ஆத்மி கட்சிகள் தங்களுக்குள் கூட்டணியை முடிவு செய்யாவிட்டால் டில்லியில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கே அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கே செல்லுபடியாகும். அதற்குள் மீண்டும் தேர்தல் நடத்தி சட்டசபை கூட வேண்டும். 2014 ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் லோக்சபாவிற்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அதனுடன் சேர்ந்து டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் பட்சத்தில் துணைநிலை ஆளுனர், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் குழுவை அமைத்து ஆட்சி நடத்தும் பொறுப்பை பெறுவார். பொதுவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகளே அங்கம் வகிப்பர். ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றால் அம்மாநிலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் ஏற்படுத்த முடியாது. இதனால் டில்லியின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் பிடிவாத போக்கினால் தலைநகரின் வளர்ச்சியும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.