12/09/2013

| |

கிரானில் கை எறி குண்டு செயலிழப்பு



















(மட்டு செய்தியாளர்)

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் கைக் குண்டு ஒன்றினை பாதுகாப்புப் படையினர்  செயல் இழக்கச் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.  நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று விஷ்ணு ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள தீர்த்தக்கேணியில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதனை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து இராணுவத்தினரின் குண்டு செயல் இழக்கச் செய்யும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று அதனை கைக்குண்டு என கண்டறிந்து அதனை வெடிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலும் ஒரு கைக்குண்டு ஒன்றினை இதே இடத்தில் செயல் இழக்கச் செய்யப்பட்டதாகவும் இவைகள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் நாசகார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்க்காக அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.இமானுல்லா மேலும் தெரிவித்தார்.